121

- துகளாகி (வருந்தி), உகுவதுபோலும் - உதிர்ந்து விழுவது போலவுளது, (என்று தலைவி தோழியிடங் கூறினாள்,)

(ப-ரை.) காடுகள் தழைத்துத் தலையெடுக்க, ஆயர் ஊதுங் குழலோசை தோன்ற, ஏனங்கள் இடந்த மணிகளினெதிரே முகில்கள் சிரிப்பதுபோல மின்கள் ஒளிவிட இக்காலத்தும் இறந்து படாமையான் நாணில்லாத என்னுயிர் ஒழுகுவது போலவுளது.

(விரி.) "நாண வென்னாவி," எனவும் பாடம், அப்பாடத்திற்கு, செய, தோன்ற, ஆட. இவற்றைக்கண்டு என்மனம் நாணுதலைச் செய்ய, ஆவியுடைந்து உகுவது, போலும் என முடிக்க, பழைய வுரையில், 'உடைந்து,' என்னும் மொழிக்குப் பொருள் காணப் பெறவில்லை.

(122)

இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு
மும்மையே யாமென்பா ரோரார்கா - ணம்மை
யெளிய ரெனநலிந்த வீர்ங்குழலா ரேடி!
தெளியச் சுடப்பட்ட வாறு.

[குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த
தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழலோசை அந்தி
மாலைப் பொழுதின்கட் கேட்டதனாற் றுயருறாதாளாய்த்
தோழிக்குச் சொல்லியது]

(பத.) ஏடி - தோழியே! நம்மை - (முன்பு தலைவனைப் பிரிந்திருந்த) நம்மை, எளியர் என - வருத்துதற்கு இலகுவானவர்கள் என்று நினைத்து, நலிந்த - வருத்திய, ஈர்ம் குழலார் - குளிர்ந்த புல்லாங் குழலார், தெளிய - (உலகிற் பலரும்) அறியும்வண்ணம், சுடப்பட்டவாறு - சுட்டுத் துளை செய்யப்பட்ட முறையினை, காண் - (நன்கு) காண்பாயாக, (இதனால்,) இம்மையால் - இப்பிறப்பின் கண்ணே, செய்தது - ஒருவன் செய்த தீவினை, இம்மையே-இப்பிறப்பிலேயே, ஆம் போலும் - அவனை யடைந்து பயன் கொடுக்கும்போற் காண்கிறது, ஓரார் - (இவற்றையெல்லாம் நன்கு) ஆராயாத அறிவிலிகளே, உம்மையே ஆம் என்பார் - மறுபிறப்பின் கண்ணே தான் அத்தீவினை