122

பயன் கொடுக்கும் எனப் பகர்வார்கள். (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) இப்பிறப்பின்கட் செய்த தீவினை இப்பிறப்பின்கண்ணே விளையும் போலும்! மறுபிறப்பின்கண் ஆம் என்பார் அறியாதார் காண்; முன்பு நம்மை எளியரெனக் கொண்டு துயர்செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சுடப்பட்டவாற்றைப் பாராய்.

குழல் நலிவது நெருப்பாற் சுடப்பட்டுத் துளை பட்ட பின்: சூடுண்டது பிறரை நலிந்ததாற் பயனென்று குழலைச் சொல்லுமா றென்னையெனிற் பிறரை நலியுந் தன்மை முன்பே அதற்குளதாதலாற் பட்ட தெனக் கொள்க.

(விரி.) இம்மையால் - உருபு மயக்கம். செய்ததை - ஐ சாரியை. ஈர்ங்குழலார் என்பதற்கு முன்பு காதலருடன் கூடி வாழ்ந்து நம்மை யிகழ்ந்து இப்பொழுது பிரிந்து வருந்தும் பெண்கள் எனவும் கொள்ளக் கிடக்கின்றமை காண்க. குழலார் என்றது இழிவு கருதியதாம்.

(123)

முல்லை முற்றும்