124

ஊடலும், ஊடனிமித்தமுமாகிய வொழுக்கம். எங்கையர் - தலைவிக்குப் பின்னர்த் தலைவனாற் கொள்ளப்பட்ட காமக் கிழத்தியரும், பரத்தையரும்.

(124)

மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோற் றுடியோடு தோன்றாமுன் - றூக்கோற்
றொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து.

[இதுவுமது]

(பத.) மா - அழகிய, கோல் - கைக்கோலினைக் கொண்ட, யாழ் - யாழினையுடைய, பாண்மகனே - பாணனே, மண் யானை - மண்ணாற் செய்யப்பட்ட விளையாட்டு யானைக்கு, பாகனார் - ஒட்டுதற்கருத்தாவாகிய என் மகனார், தூக்கோல் துடியோடு - கொட்டுகின்ற தூக்கோல் துடியுடனே, தோன்றாமுன் - பிறப்பதற்கு முன்னே, (தலைவன்,) கடி உடையேன் - அவனால் வரையப்பட்ட வாழ்க்கையையுடைய வெனது, வாயில் - மனைவாயிலினை, கடந்து - தாண்டி, தூ - தூய்மை (நேர்த்தி) யான, கோல் - வளைவுகளைக் கொண்ட, தொடி உடையார் - வளையல்களை யணிந்த பரத்தையரது, சேரிக்கு - இருப்பிடத்திற்குச் (சென்று,) தோன்றுமோ - காணப்படுமோ, சொல்லாய் - (யான் கூறுவதற்கு மாறுண்டாயின்,) சொல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்)

(ப-ரை.) அழகிய காம்பையுடைய யாழ்ப்பாணனே! மண்ணாற் செய்யப்பட்ட யானைப்பாகராகிய என்மகனார் தாங் கொட்டுகின்ற தூக்கோற் றுடியோடு இங்குத் தோன்றி யொழுகுவதற்கு முன்பு தூய புரிப்புச் செயல் களையுடைய தொடியுடையார் மனையின்கட் சென்று தோன்றி யொழுகுமோ சொல்லாய் இப்பொழுது; அவனால் வரையப்பட்ட வாழ்வினையுடையேன் வாயில் கடந்து.

(விரி.) கோல் - மூங்கிலினாகிய கைக்கோல். பாணர் மூங்கிற் கைக்கோல் கைக்கோடல் பண்டை வழக்கு. தூக் கோற்றுடி - ஒருவகை யுடுக்கு. மகன் தோன்றிய பின் தலைவன் பரத்தையர் சேரி சென்றனன். ஆதலான் மகப்