131

பண்ணினை, ஒதி - பாடி, வருடாயோ - ஊழியஞ் செய்த தில்லையோ; காலையாழ் - காலைவேளையிற் பாடவேண்டிய பண்ணினை, செய்யும் - பாடும்படியான, இடம் - நிலையினை, அறியாய் - தெரியாதவனாய், சேந்தா - சாம்புதலில்லாத, நின் - உன்னுடைய, பொய் மொழிக்கு - பொய்மையான சொற்களுக்கு, நையும் - உளநெகிழும்படியான, இடம் - இடத்தினை, அறிந்து - தெரிந்து, நாடு - விரும்பிச் செல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

(விரி.) சேந்தல் - சாம்புதல்; ஒடுங்கல். காலையாழ் - காலை வேளையில் வாசிக்கும் பண். மாலையாழ் - மாலை வேளையில் வாசிக்கும் பண்.

(133)

கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயனோக்கிக் கொல்லோ - கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரிற் கேளா
வடிநாயேன் பெற்ற வருள்.

[பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமையினைத் தோழிக்கு விறலி கூறியது]

(பத.) பெரியோர்க்கு - பெருந்தன்மை முதலிய நற்பண்புகள் மிகுந்த மக்கட்கு. கிழமை - யாவரையும் தமக்குரியரெனக் கொண்டாடுந் தன்மை, கேடு இன்மை கொல் ஓ - நீங்காதுறையும் போக்காலோ, (அன்றி,) பழமை - பழமையானவைகள், பயன் - மக்கட்குப் பல்லாற்றானும் பயனுறுதலை, நோக்கி கொல் ஓ - நினைந்து பார்த்தமையாலோ, கிழமை - உரிமைகள் (பல வாய்ந்த,) குடி பல - பல குடிமக்கள், நாய்கர் - தக்க தலைவர்களை, பெற்றார் இல் - பெற்றார்களைப் போல, அடி நாயேன் - (மிகவும் தாழ்மையுள்ள யான், கேள் ஆ - சுற்றம் போன்று, பெற்ற - (வாயில் நேர்தற்குக் காரணமாக) அடைந்த, அருள் - (தலைவி காட்டிய) இவ்வருளானது, (எனக்கு வாய்த்தது? என்று விறலி தோழியினிடங் கூறினாள்.)

(விரி.) கொல் - அசைநிலை. ஓ - ஐயவினாப்பொருள். இல் - ஐந்தனுருபு: ஒப்புப் பொருள். தலைவன்