133

எங்கை யியல்பி னெழுவல்யாழ்ப் பாண்மகனே!
தங்கையும் வாயு மறியாம - லிங்க
ணுளர வுளர வுவனோடிச் சால
வளர வளர்ந்த வகை.

[பாணற்கு வாயின் மறுத்தது]

(பத.) யாழ் பாண் மகனே - யாழையுடைய பாணனே! இங்கண் - இவ்விடத்தே (எனக்கு வாய்த்த,) உவன் - உவ்விடத்தே திரிபவனாகிய என் மகன், தம் கையும் - தன் சிறிய கை (சாடை) களாலும், வாயும் - செவ்வாயின் மழலை மொழிகளாலும், அறியாமல் - பொருள் புலப்படாத நிலையில், உளரஉளர - பன்முறை குழறிக் கொண்டு, ஓடி - விரைந்து சென்று, சால - மிகவும், வளர வளர்ந்த வகை - நாளடைவில் வளர்ந்த முறையான், (யான்,) - நான், எங்கை - எனக்குப் பின்னவளாகிய பரத்தை, இயல்பின் - (தலைவனோடு கூடிச் சிறப்புற்றிருக்குந்) தன்மையினைப் போன்று, எழுவல் - கிளர்ச்சியுற்று வாழ்கின்றனன். (ஆகலின், எனக்கொரு குறையுமின்று. என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

(விரி.) உளர உளர - அடுக்குத்தொடர்; மிகுதி பற்றி வந்தது. தலைவன் வருகை கூற வந்த பாணனுக்கத் தலைவி தன்மகனோடு கூடியுள்ள வாழக்கையே தனக்குச் சாலும் என இச் செய்யுளால் வாயில் மறுக்கலாயினள். தன்மகன் மழலை மொழிகளுடன் விளையாடித் தன்னை மகிழ்விக்கின்றனன் என்பது தோன்ற, "உவன் தங்கையும் வாயும் அறியாமல் ஓடி வளர்ந்த வகை," எனப்பட்டது. எழுவல் - தன்மை யொருமை வினைமுற்று. யான் - தோன்றா எழுவாய்.

(136)

கருங்கோட்டுச் செங்க ணெருமை கழனி
யிருங்கோட்டு மென்கரும்பு சாடி - யருங்கோட்டா
லாம்பன் மயக்கி யணிவளை யார்ந்தழகாத்
தாம்ப லசையினவாய் தாழ்ந்து.

[தலைமகன் புறத்தொழுக்கினைத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது]