134

(பத.) கரும் - பெரிய, கோடு - கொம்பினையும், செம்கண் - சிவந்த கண்களையுங் கொண்ட, எருமை - எருமையானது, கழனி - வயல்களில் (விளைந்துள்ள), இரும் கோடு - பெரிய (கொம்பு) கழிகளாகிய, மெல் கரும்பு - மெதுவான கரும்புகளை, சாடி - மோதி, அரும் - அரிய, கோடு ஆல் - கொம்புகளாலே, ஆம்பல் - குமுத மலர்களை, மயக்கி - கலக்கி, அணி - அழகிய, வளை - குவளை மலர்களை, ஆர்ந்து - தின்று, வாய் தாழ்ந்து - வாயினைத் தாழவைத்து, அழகா - அழகாக, பல் அசையின - பற்கள் அசை போடுவனவாகக் காணப்படும். (பாராய் தோழீ! என்று தலைவி கூறினாள்.)

(விரி.) "கருங்கோடு, செங்கண்," என வந்தது முரண் டொடையாகும். தலைவனின் புறத்தொழுக்கினைத் தலைவி மருத நிலக் கருப்பொருள்களில் ஏற்றிக் கூறுகின்றனள். எருமையாகிய தலைவன் மென்கரும்பாகிய தன்னைச் சாடி விலக்கி, தோழிமாராகிய ஆம்பல்களை யகற்றிப் பரத்தையாகிய குவளையினைத் தின்று வாழ்வதாகச் செப்பிய முறை தெளிக. தன்னால் வெறுக்கப்பட்ட தலைவனை எருமை யென்றதன் கருத்தும், எருமைக்கும் ஏற்ற மென் கரும்பாகத் தன்னை நிறுத்திய நிறையும், பரத்தையின் அற்ப வாழ்வினைக் குவளையெனக் கூறி விளக்கிய முறையும் கொண்டாடற் பாலனவாம். இது உள்ளுறை யுவமம் எனப்படும். "பலசை யினவாய்த் தாழ்ந்து", என்ற பாடம் பொருட் கியைபின்மையின் விலக்கப்பட்டது. குவளை - முதற்குறை விகாரம் பெற்று, 'வளை,' என வந்தது.

(137)

கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலோற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி யன்னத்தை யார்த்துவான் - சென்றுள்ளி
வந்தையா வென்னும் வகையிற்றே மற்றிவன்
றந்தையார் தம்மூர்த் தகை.

[மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடு இணங்கிய
மைந்தனை இனிதிற் புகழ்ந்து சொல்லியது]

(பத.) இவன் - இம்மைந்தனின், தந்தையார் தம் - தகப்பனாராகிய தலைவரின், ஊர் - மருத நிலத்தூரின்,