135

தகை - தன்மையானது, கன்று - கன்றினை, உள்ளி - (எருமைகள்) நினைந்து, சோர்ந்த பால் - (மடிவழியாகச்) சோரவிடப்பட்ட பாலானது. தாமரை பூ - தாமரைப் பூவினிடத்தே, வல் துளி - பெரிய (வெண்மையான) துளியினைப் போன்று அமர்ந்திருக்கும், அன்னத்தை - அன்னப் பறவையினை, ஆர்த்துவான் - உண்பிக்க வேண்டி, கால் ஒற்றி - வாய்க்காலாகப் புறப்பட்டு, சென்று - (தாமரைத் தடாகத்தைச்) சேர்ந்து, உள் - உள்ளிருந்து, இவந்து - மேலேறி, ஐ ஆ என்னும் - (கண்டார் இஃதென்?) அழகிய காட்சித்து என்று வியக்கும், வகையிற்று - மேன்மையினை யுடைத்து. (என்று தலைவி தோழியிடங் கூறினாள்)

(விரி.) மற்று, ஏ - அசைநிலைகள். இங்குத் தமது ஊடல் தீர்தற்குக் காரணமாயிருந்த மகனைப் புகழு முறையில் புணர்ச்சியின்ப மளித்த தலைவனையும் புகழுமுறை கருதற்பாலது. மேலும் மருத நிலக் கருப்பொருள்கள் தலைவனின் அருட் போக்குக்குச் சிறிது இயைந்த இறைச்சிப் பொருளாக அமைந்துள்ள முறையும் உன்னற் பாலதாம்.

(138)

மருதோடு காஞ்சி யமர்ந்துயர்ந்த நீழ
லெருதோ டுழல்கின்றா ரோதை - குருகோடு
தாராத்தோ றாய்ந்தெடுப்புந் தண்ணங் கழனித்தே
யூராத்தே ரான்றந்தை யூர்.

[இதுவுமது]

(பத.) ஊரா - (மேலமர்ந்து) ஊர்தற் கியலாத, தேரான் - சிறு தேரினையுடையானாகிய என் மகனின், தந்தை - தகப்பனது, ஊர் - மருத நிலத்தூரானது, மருதோடு - மருதமரங்களுடன், காஞ்சி - காஞ்சி மரங்களும், அமர்ந்து - பொருந்தி, உயர்ந்த - வானளாவிய தாலுண்டான, நீழல் - நிழலின்கண்ணே, எருதோடு - காளைகளுடனே, உழல்கின்றார் - உழைப்பவர்களாகிய உழவர்களின், ஒதை - ஒலியானது, குருகோடு - நாரைகளுடன், தாராதோறு - வாத்துக்களின் ஒலிகள் தோறும், ஆய்ந்து - சென்று கலந்து, எடுப்பும் - மிகுந்து காணும்படியான,