தண் - குளிர்ந்த, அம் - அழகிய, கழனித்து - வயல்களோடு கூடியதாம் (என்று தலைவி தோழியிடங் கூறினாள்). (விரி.) ஊடல் தீர்ந்து புணர்ந்து மகிழ்ந்த தலைவி அப்புணர்ச்சிக்குக் காரணமான மகனையும் மணாளனையும் இச்செய்யுளால் புகழ்கின்றனள். ஊர் கழனித்து எனமுடிக்க. ஓதை ஆய்ந்து, எடுப்புங் கழனி எனக் கூட்டுக. தலைவன் பாற் கண்ட நன்மைகள் அவனாட்டுக் கழனியைச் சிறப்பித்தலாற் பெறப்பட்டன. மகன் வாயிலாக மணாளன் புணர்ந்தமையின், "ஊராத் தேரான் தந்தை," என்றாள். ஏ - அசைநிலை. நீழல் - நீட்டல் விகாரம். (139) மண்ணார் குலைவாழை யுட்டொடுத்த தேனமதென் றுண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளுங் - கண்ணார் வயலூரன் வண்ண மறிந்து தொடுப்பாண் மயலூ ரரவர் மகள். [மன்றன் மனைவரு செவிலிக்குத் தோழி அன்புற வுணர்த்தல்] (பத.) மண் ஆர் - மண்ணிடத்தே படிந்த, குலை வாழைஉள் - குலையினையுடைய வாழை மரத்தினிடத்தே, தொடுத்த - வைக்கப்பெற்ற, தேன் - தேனினை, நமது என்று - நம்முடைய தென்று நினைத்து, உண்ணா - உண்டு, மயல் - மயக்க (முற்ற), ஊரார் அவர் - (மருத நிலத்தூர்த்) தலைவரின், மகள் - மகளாகிய தலைவி, பூ - அழகிய, தாமரை பூ உள் உம் - தமாரைப் பூவினிடத்திலும், கண் ஆர் - தன் கண்ணிடத்தே நிறைந்து நின்றுள்ள, வயலூரன் - மருத நிலைத்தூர்த் தலைவனின், வண்ணம் - நிறவழகினை, அறிந்து - கண்டு, தொடுப்பாள் - (மாலை) தொடுத்தலைச் செய்வாள். (என்று செவிலிக்குத் தோழி கூறினாள்.) (விரி.) தலைவனுக்குந் தலைவிக்கும், உடன்போக்கின் பின் தலைவன் மனையில் மண நிகழ்ந்தது. அதனைக் கேள்வியுற்ற செவிலி மணமக்களைக் காண வந்தபொழுது தோழி மணமக்களின் அன்புடன் கூடிய வாழ்க்கையினை எடுத்துச் சொல்லியதாகு மிச் செய்யுள். தலைவிக்குக் காணும் பொருள்களிலெல்லாம் தலைவனின் அழகிய வடிவத்தை யுணரும் நிறைந்த அன்புண்டென்பார் "தாமரைப்
|