பூவுள்ளும் கண்ணார் வயலூரன் வண்ணமறிந்து தொடுப்பாள்," என்றனர். மன்றல் மனை - மண நிகழ்ந்த வீடு. அன்பு உறவு - தலைவன் றலைவியரின் அன்பாகிய உறவு. வாழைக் குலை மிகத் தாழ்ந்துள்ளதென்பார், "மண்ணார் குலை வாழை," என்றார். (140) அணிக்குரன்மே னல்லாரோ டாடினென்ன மணிக்குரன்மேன் மாதார ளூடி - மணிச்சிரல் பாட்டை யிருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே யாட்டை யிருந்துறையு மூர். [ஊடிநின்ற தலைமகளின் நிலையினைத் தலைமகன், சிறந்த மொழியை ஒழிந்துநின்ற வாயிலாகிய பாணற்கு உரைத்தது.] (பத.) (பாணனே!) மணிக்குரல் - மணியொலி போன்ற பேச்சினையுடைய, மேல் - மேன்மையுள்ள, மாதராள் - தலைவி, அணி குரல் - அழகிய குரலினானே, மேல் - மேன்மைபெற்ற, நல்லார் ஓடு - பெண்களாகிய பரத்தையருடன், ஆடினேன் என்ன - (புணர்ந்து) விளையாடினேன் என்று நினைத்து, ஊடி - பிணக்கினை மேற்கொண்டு, யாட்டை - ஆண்டுக்காலம்வரை, இருந்து - மனத்தை யடக்கி, உறையும் - தங்கும், ஊர் -ஊரானது, மணி - அழகிய, சிரல் - சிச்சிலிப்பறவை, இருந்து - தங்கி, பாட்டை - பாட்டினை, அயரும் - பாடுகின்ற, பாய்நீர் - பாய்ந்து செல்லும்படியான நீர் வளப்பத்தினுடைய, கழனித்து - வயல்களோடு கூடியது. (என்று தலைவன் பாணனிடங் கூறினான்.) (விரி.) புதல்வற் பயந்து நெய்யாடிய தலைமகண் மாட்டுத் தலைமகன் போந்து தோழிமுதலிய வாயில்களான் ஊடல் தீர்க்க முயன்று முடியாது போயினமையின், பாணனை வாயிலாக வேண்டிய தலைவன் அவன்மாட்டுக் கூறியதாகு மிச் செய்யுள் பாணன் இன்னிசையான் மகிழ்வித்துத் தலைவியின் ஊடலைப் போக்குபவனாகலின், சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில் என்ப்பட்டனன். இவனைத் தொல்காப்பியர், "ஏனைவாயில்", என்பர். (தொல். பொருள். கற்பு. 5.) ஏ - அசைநிலை. (141)
|