தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை புண்கயத் துள்ளும் வயலூர! - வண்கயம் போலுநின் மார்பு புளிவேட்கைத் தொன்றிவண் மாலுமா றநோய் மருந்து. [தலைவனைப் பாங்கி புகழ்தல்.] (பத.) தண் - குளிர்ந்த, கயத்து - குளத்தினிடத்திலே (மலர்ந்துள்ள), தாமரை - தாமரைப்பூவிலேயுள்ள, நீள் - பெரிய, சேவலை - ஆண் அன்னப் பறவையினை, தாழ்பெடை புள் - கீழ்ப்படிதலுள்ள பெண் அன்னப்பறவையானது, கயத்து உள்ளும் - நீரிலிருந்து நினைக்கும்படியான வயல் ஊர - கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்தூர்த் தலைவனே! வண் கயம் - வளப்பம் பொருந்திய குளத்தினை, போலும் - போன்ற, நின் மார்பு - உனது மார்பானது, ஒன்று இவள் - (நின்னோடு) கூடி வாழும் இவளது, மாலும் - மயக்கத்தைத் தரும், மறா - நீங்காத, நோய் - காமநோய்க்கு. மருந்து - மருந்தாகி, புளி வேட்கைத்து - புளியம்பழத்தின்கண் மக்கள் கொள்ளும் விருப்பம்போல் மேலும் மேலும் விரும்பும் மேன்மையினைக் கொண்டதாகும். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (விரி.) தலைவன் வரைவினை மேற்கொண்டு தலைமகளை வரைந்த பின், அதற்குக் காரணமாய் நின்றிருந்த பாங்கியைப் புகழ, அது கண்டு மகிழ்ந்த பாங்கி தலைவனைப் புகழ்ந்ததற்கு மிச் செய்யுள். "புட்கயம்" எனற்பாலது எதுகை நோக்கி. "புண்கயம்," என மெலிந்து நின்றது. (142) நல்வய லூரனறுஞ்சாந் தணியகலம் புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கட் - புல்லியார் கூட்டு முதலுறையுங் கோழி துயிலெடுப்பப் பாட்டு முரலுமாம் பண். [மன்றன் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற வுணர்த்தல்]
|