குழும - கூடி ஒலிக்க. (செய்யும் சிறப்பின்கண்ணே தலைமகன்,) கோடு - வளைவாகிய நச்சுப்பற்களையுடைய, அரவம் - (வாசுகி யென்னும்) பாம்பினை, மந்திரம் - (பாற்கடலைக் கடைந்த) மந்திரமலையானது, கொண்டு - மேற் கொண்டு, ஒங்கல் என்ன - சிறப்புற்றதைப் போல, மக - தன் மகனை, சுமந்து - மேற்கொண்டு, இந்திரன் போல் - (மருத நிலத் தெய்வமாகிய) வேந்தனைப் போல, இடத்து - (தலைமகளின்) இடப்பக்கத்தே, வந்தான் - வந்து சேர்ந்தனன். (என்று தோழி கூறி மகிழ்ந்தாள்.) (விரி.) இன்ன + இவை = இன்னிவை: அகரந் தொகுத்தல். என்ன - உவமவுருபு. தலைமகள் பெற்றெடுத்த மகற்கு ஐம்படை பூட்டிப் பெயரிடுதலாகிய சிறப்பின்கண் தலைமகன் புதல்வனை மேற்கொண்டு தலைமகளோடு வந்தமையினைக் கண்டு மகிழ்ந்த தோழி கூறியதாகு மிச் செய்யுள். இது. (தொல். பொருள். கற்பு. 5) "கரணத்தினமைந்து முடிந்தகாலை," என்ற சூத்திரத்தின்கண், "புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின்...............செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்," என்பதனாற் பெறப்படும். செய் பெருஞ் சிறப்பு - பிறந்த புதல்வன் முகங் காண்டல், ஐம்படை பூட்டல், பெயரிடுதன் முதலியன. (145) மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியரா யெண்கிடந்த நாளா னிகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த தன்மை யொழியத் தரள முலையினாண் யென்மைசெய் திட்டாண் மிக. [அகம் புகன் மரபின் வாயில் தலைமகளன்பின் சிறப்பினைத் தலைமகற்கு முகம்புகன் முறைமையிற் கூறியது] (பத.) (எம்பெருமானே!) மண் கிடந்த - மண்வடிவமாகக் காணப்படும், வையகத்தோர் - பூமியில் வாழும் மக்கள் (பலர்), பெரியராய் - சான்றோராயிருந்தும், எண் கிடந்த-வறிதே எண்ணிக்கையளவிலேற்பட்ட, நாளான் - வாழ்நாளிலே, இகழ்ந்து ஒழுக - (தமது வாழ்க்கையின்
|