142

சிறுமையினத் தலைமகளின் பெருந்தன்மைப் போக்கோடு ஒப்பிட்டு நோக்கி அவளுக்குக்) கீழ்படிந்து நடக்கும் வண்ணம், பெண் - பெண்ணின் மேன்மையானது, கிடந்த-தங்கியுள்ளதா லுண்டான, தன்மை - மேட்டிமை நிலையானது, ஒழிய - தன்னைவிட்டு நீங்கும்படி, தரளம் - முத்துமாலைகளை யணிந்துள்ள, முலையினாள் - முலைகளையுடைய தலைமகள், மிக மிகுதியும், மென்மை - எளிமையும் இனிமையுமாகிய அன்பினை, செய்து இட்டாள் - இல்லற வாழ்க்ககையிலே கைக்கொண்டு ஒழுகுவாளாயினள். (என்று தலைமகனிடத்தே வாயிலோன் கூறினான்.)

(விரி.) பெரியாராயும் என உம்மை விரிக்க அகம் புகல் மரபின் வாயில் - தலைமகளின் அகமாகிய இல்லின் கண்ணே புகுந்து பழகி அறியும் முறைமையினையுடைய தூது. முகம் புகல் முறைமை - குறிப்பறிந்து பேசுந் தன்மை. இது, தலைவி இல்லறத்தினை எழிலுறும் அன்பின் முறையிலே உலக மக்கள் பலரும் கொண்டாடும்வண்ணம் நடத்துஞ் செய்தியினை வாயிலோன் தலைமகற் கெடுத்தியம்பியதாகும். இதனை, "கற்புங் காமமும்......... பிறவு மன்ன கிழவோள் மாண்புகள், முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்த, லகம்புகன் மரபின் வாயில் கட்குரிய," (தொல். பொருள். கற்பு. 11.) என்றதனாற் கொள்க வாயிலோன் - தூதுவன்: பெரிய எழுத்துக்களிலுள்ளன பழைய பிரதிகளிற் காணப்படாமற் புதியன வாய்க் கருதிக் கொண்டன. மற்று - அசைநிலை.

(146)

செங்கட் கருங்கோட் டெருமை சிறுகனையா
லங்கட் கழனிப் பழனம்பாய்ந் - தங்கட்
குவளையம் பூவொடு செங்கயன்மீன் சூடித்
தவளையுமேற் கொண்டு வரும்.

[தலைமகன் புறத்தொழுக்கினைத் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது]

(பத.) (தோழியே!) செம் கண் - சிவந்த கண்களையும், கரும் கோடு - கரிய கொம்புகளையும், (கொண்ட) எருமை-எருமையானது, சிறு கனை ஆல் - சிறிய கனைப்புடனே; அம் கண் - அழகிய இடத்தையுடைய, கழனி - வயல்கள்