ஆர் - யார் என்பதன் மரூஉ. அறக் கற்புடையாள் என்பார், "கற்பெயர் சேராள்," என்றார். (150) சேறாடுங் கிண்கிணிக்காற் செம்பொன்செய் பட்டத்து நீறாடு மாயதிவ னின் முனா - வேறாய மங்கையரி னாடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! எங்கையரி னாடலா மின்று. [பாணற்கு வாயின் மறுத்தது] (பத.) மா - சிறந்த, கோல் - மூங்கிற் கோலையும், யாழ் - யாழினையுமுடைய, பாண்மகனே - பாணணே! எங்கையரின் - (எனக்குப்பின்வந்த) தங்கைமாராகிய பரத்தைய ரோடு, ஆடலாம் இன்று - கூடி விளையாடுதற்குரிய இப்பொழுது, சேறு ஆடும் - சேறுகள் நிரம்பியிருக்கும், கிண் கிணிகால் - சிறு சதங்கையணியப் பெற்ற கால்களிலும், செம்பொன் - சிவந்த பொன்னாலே, செய் - செய்யப்பட்ட, பட்டத்து - நெற்றிச் சுட்டியிலும், நீறு ஆடும் - புழுதி படியும் (தன்மை), ஆயது இவன் - பொருந்தியதனையுடைய இம்மகனோடு, இம்முனா - இல்லின் முகப்பிலே, வேறு ஆய - இவனினும் நயத்தால் வேறுபட்டு மேம்பட்ட, மங்கையரின் - பரத்தையரிடம் விளையாடுமாறு போல, ஆடுமோ - (தலைவன்) விளையாட விரும்புவானோ? விரும்பான். ஆகலின், நீ வீணே வாயில் கூறி வருந்த வேண்டாம், என்று தலைவி பாணனிடங் கூறினாள்.) (விரி.) எங்கையரின் - உருபு மயக்கம். மங்கையரின் - ஐந்தா வதனுருபு இன் ஒப்புப் பொருளது. (151)
முலையாலும் பூணாலு முன்காட்டஞ் சேர்ந்த விளையாலு மிட்ட குறியை - யுலையாது நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வ னிற்கு முனைமுலைப்பா றார்சிதைக்கும் வேண்டா தழு.
[நெய்யணி 'நயந்த கிழவனைக் கிழத்தி நெஞ்சு புண்ணுநீஇக் கூறியது]
|