147

(பத.) (தலைவனே!) தாம் - பரத்தையர்கள் தம், முலையாலும் - முலைகளாலும், பூண் ஆலும் - அணிகளாலும், முன் கண் - முன்னே, சேர்ந்த - கலவிக்காலத்தே கைக் கொண்ட, இலையாலும் - இளந்தளிர் களாலும், இட்ட - (நின் மார்பிற்) பொருத்திவைத்த, குறி - குறியானது, உலையாது - கெடாதவண்ணம், நிற்கும் - (என் எதிரே வந்து) தோன்றும், உனை - உனது, தார் - மாலையினை, நீர் சிதைத்கும் - உமிழ் நீரினைச் சிந்துகின்ற, வாய் - வாயினையுடைய, புதல்வன் - என் மகன், (உண்ணும்) முலைப்பால் - எனது மார்பின் கணுள்ள பாலானது (நீ என்னைத் தழுவினால்,) சிதைக்கும் - வெளிப் பட்டுக் கெடுத்து விடும், (ஆகலின்,) தழு - (என்னைத்) தழுவிக் கொள்ளுதல், வேண்டா - வேண்டுவதின்று. (என்று தலைமகள் தலைவனை நோக்கிக் கூறினாள்.)

(விரி.) உனை - வேற்றுமை மயக்கம் குறியை - ஐ: சாரியை. நின் மார்பின்கண்ணுள்ள மாலையினை என் முலைப்பால் சிதைக்கு மாகலின் என்னைத் தழுவ வேண்டா எனத் தன்னை நெருங்கிவந்த தலைமகனை நோக்கி மகப் பெற்றெடுத்த தலைமகள் கூறினாள் என்பது கருத்து. நெய்யணி நயந்த - மகப் பெற்றெடுத்த புனிறு தீர மூழ்கி வீடு புகுந்த நிலையில் தலைவியினை விரும்பிவந்த, நெஞ்சு புண்ணுறல் - தலைமகன் பரத்தமையுடன் வந்தமை கண்டு வருந்தல். இதனை, "அவனறிவாற்ற வறியுமாகலின்" (தொல். பொருள். கற்பு 6) என்ற சூத்திரத்து, "கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ, நளியினீக்கிய விளிவரு நிலையும்," என் பதனாற் கொள்க. தழு - முதனிலைத் தொழிற் பெயர்.

(152)

துனிபுலவி யூடலி னோக்கென் றொடர்ந்த
கனிகலவி காதலினுங் காணேன் - முனிவகலி
னாணா நடுக்கு நளிவய லூரனைக்
காணாவெப் போதுமே கண்.

[தலைமகள் தோழியிடத்துத் தலைமகனைக் காய்ந்து
கூறியது]