148

(பத.) (தோழியே! தொடர்ந்த - தொடர்புடையதான கனி - இன்பமாகிய கனியினை, கலவி - (தலைமகனுடன்) கலத்தலோடு கூடிய, காதலினும் - அன்புமிக்க காலத்திலும், காணேன் - காணப் பெற்றேனில்லை, (ஆகலின்,) முனிவு - எனது வெறுப்பு, அகலின் - நீங்குமாயின், (அப் பொழுது,) நாணா - வெட்கமுற்று, நடுக்கும் - (அதனால்) நடுங்கச் செய்யும், நளி - குளிர்ந்த, வயல் ஊரனை - மருத நிலத்தூர்த் தலைவனை, கண் - என் கண்கள், எப்போதுமே - எப்பொழுதும், காணா - காண விரும்ப வில்லை, (அப்படியிருக்க) துணி - வருத்த மிக்க, புலவி - மனப் பிணக்கினை, ஊடலின் - பொதுவான ஊடுதலினைப்போல, நோக்கு - எண்ணிப் பேசுதல், என் - எதற்காக? (என்றுதலைமகள் தோழியை வினவினள்.)

(விரி.) இஃது ஊடலை யொழி யென்ற தோழியினை நோக்கித் தலைமகள் கூறியதாகும். இதனை, "அவனறிவாற்ற வறியுமாகலின்" (தொல். பொருள். கற்பு. 6) என்ற சூத்திரத்து, "வடுவறு சிறப்பிற் கற்பிற்றிரியாமைக், காய்தலு முவத்தலும்," என்பதனாற் கொள்க.

(153)

மருதம் முற்றும்.