16

(விரி.) சான்றோர் - பெற்றோர் முதலிய பெரியார்கள், தனையன் - தன் + ஐயன்: தலைவிக் குடன்பிறந்த மூத்தோன், நற்றாய் - பெற்ற தாய், முந்நீர் - கடல்: ஆக்கல், காத்தல், அழித்தலாகிய முத்தன்மையினை யுடைய நீர்,

(15)

நாணாக நாறு நனைகுழலா ணல்கித்தன்
பூணாக நேர்வளவும் போகாது - பூணாக
மென்றே னிரண்டாவ துண்டோ மடன் மாமே
னின்றேன் மறுகிடையே நேர்ந்து.

[தோழி சேட் படுத்த விடத்துத் தலைமகன்
றனதாற்றாமையாற் சொல்லியது.]

(பத.) நாள் நாகம் - அன்று பூத்த சுரபுன்னை மலர், நாறும் - மணக்கும்படியான, நனை - (தேனால்) நனையப்பட்ட, குழலாள் - கூந்தலையுடைய தலைவி, தன் - தன்னுடைய, பூண் ஆகம் - அணிகலனோடு கூடிய மார்பினை, நல்கி - (எனக்குக்) கொடுத்து, நேர்வு அளவும் - என்னோடு புணரும் வரைக்கும், பூண் ஆகம் - (எலும்பாற் செய்த) அணிகலன் என் மார்பினின்றும், போகாது - நீங்கப் போவ தில்லை, என்றேன் - என்று (நினக்குச்) சொல்லினேன், இரண்டாவது - (இனி அதற்கு மாறாக) மற்றொரு சொல், உண்டோ - உண்டாகுமோ? (இல்லை,) மறுகு இடையே - (தலைவியின்) தெரு வழியே, நேர்ந்து - எதிர்ப்பட்டு, மடல் மா மேல் - பனைமடலாற் செய்யப்பட்ட குதிரையின்மீதே, நின்றேன் - அமர்ந்து ஊருதற்குத் துணிந்து விட்டேன், (என்று தலைவன் தோழியினிடங் கூறினான்.)

(ப-ரை.) நாக நாண்மலர் நாறும் தேனால் நனையப்பட்ட குழலாள் எனக்கு நல்கித் தன்னுடைய பூண்மார்பினை நேருமளவும் என் மார்பினின்றும் அவ்வெலும்பாற் செய்த பூண் போகா தென்று நினக்குச் சொல்லினேன்; இனி இரண்டாவது வேறொரு சொல்லுண்டோ? பனை மடலாற் செய்யப்பட்ட மாவினை யூரத் துணிந்து நின்றேன், தெருவினடுவே யுடன்பட்டு.