சென்று தளர்ந்து வருந்தும், (என்று தலைவன் தோழியினிடங் கூறினான்.) (ப-ரை.) அறிவேன் யான் அவளை; தன்னுடைய மெல்லிய இடை வருந்த, மடவாய்! சிறிது மவள் நடவாளாக இறும் இறும் என்றஞ்சி அவள் எனக்குச் சிறிதும் அருளு நெறி காணாது தளர்ந்துருகி என்னெஞ்சம் அவளொல்கி நடக்குந்தோறும் பின் சென்று தளர்தலுறும், (விரி.) அறிகு - தன்மை யொருமை வினைமுற்று நெஞ்சம் அஞ்சி, காணாது, உருகி, ஒல்கலுறும், என முடிக்க. ஆய - வருந்த. (17) என்னாங்கொ லீடி லிளவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே மருவீயா மாலை மலைநாடன் கேண்மை யிருவியா மேன லினி. [பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செறிப் பறிவுறீஇ வரைவு கடாயது.] (பத.) என்னே - இஃதென் கொடுமை! ஈடு இல் - பெருந்தன்மை இல்லாத, இள வேங்கை - இளமையான இவ்வேங்கை மரமானது, நாள் - (தினைக் கதிர் கொய்ய வேண்டிய) நாளினை, உரைப்ப (தான் பூத்தமையால்) தெரிவிக்க, (அதனால்,) இனி - இனிமேல், ஏனல் - புனமானது (கதிர்கள் கொய்யப்பட்டு,) இருவியாம் - வெறுந் தினைத் தாள்களைக் கொண்டதாகும், போர் வேலவர் - போர் விருப்ப மிக்க வேலினையுடைய எந்தையும் என்னையன் மாரும், புரிந்தது - தலைவிக்குப் பரிசமாக விரும்பியது, பொன் ஆம் - பொன்னாலாகிய அணிகலன் முதலியவாம், (ஆதலால்,) மருவி பழகுவதால், ஆம் - பயின்று வருகின்ற, மாலை - தன்மையினையுடைய மலைநாடன் - மலைநாட்டிற்குரிய தலைவனது, கேண்மை - நட்பானது, என் ஆம் கொல் - இனி யாதாய் முடியுமோ? (என்று தோழி கூறினாள்.) (ப-ரை.) தகுதியில்லாத இளவேங்கை நாட்சொல்ல, இனிக் குரலொழிந்து இருவியாய்க் கழியுந் திணையெல்லாம்;
|