எந்தையும் என்னையன்மாருமாகிய போர் வேலவர் இவட்குப் பரிசமாக மிக விரும்புகின்றது பொன்னாம்; ஆதலாற் பயிலப் பழகிவருந் தன்மையையுடைய மலைநாடன் கேண்மை யினி யென்னாய் விளையுங் கொல்லோ! என்னே! (விரி.) -இதனை நச்சினார்க்கினியர். 'தினையரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது' என்பர். தாம் - அசை நிலை. சிறைப்புறம் - தினைப்புன வேலியின் வெளிப்புறம். இருவி - தினைத்தாள். (18) பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண் - வேலொத்தென் னெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பானோ காண்கொடா வஞ்சாயற் கேநோவல் யான். [பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமற் றனதாற்றாமை மிகுதி சொல்லியது.] (பத.) பால் ஒத்த - பால் போன்ற, வெள் அருவி்- வெண்மையான நீர்வீழ்ச்சிகளிலே, பாய்ந்து - குதித்து, ஆடி - நீராடுதலைச் செய்து, பல் பூ - பல்வகையான பூக்களை, பெய்தால் ஒத்த - பரப்பி வைத்தாற் போன்ற ஐவளம் - மலைநெல் விளையும் புனத்தினை, காப்பாள் - காவல் செய்யுந் தலைவியின், கண் - கண்கள், வேல் - வேற்படையினை, ஒத்து - போன்று, என் நெஞ்சம் - எனது மனத்தின்கண், வாய் - வாவி (-தாவி,) புக்கு - புகுந்து (தங்கியது,) ஒழிவு - (என் உயிரின்) ஒழிவினை, காண்பான் ஓ - காணவேண்டியோ? (அதற்கு இவ்வளவு முயற்சி வேண்டுமோ? வேண்டுவதின்று; என்னெனின்,) யான் - நான், காண்கொடா - (தலைவியைக்) காணுதல் கொண்டு, அம் சாயல் கு ஏ - அவளது அழகிய மேனியினுக்கே, நோவல் - வருந்தாநிற்கின்றேன். (என்று தலைவன் தோழியினிடங் கூறினான்.) (ப-ரை.) பால போன்ற வெள்ளருவியைப் பாய்ந்தாடி, பல பூக்களையும் பெய்து பரப்பினாற்போலப் பூங்கொடிகள் பரந்து ஐவனப்புனத்தைக் காப்பாள் கண்கள், வேல் போன்று எனது நெஞ்சத்தின்கண் வாவிப்புக்கு என்னுயிரை
|