ஒழிவு காண வேண்டியோ புறம் போகாது உள்ளே அடங்கின; இத்துணை வேண்டுமோ? அவளுடைய அழகிய மேனிக்கே நோவாநின்றேன் யான். (விரி.) பின் நின்ற - தோழியின் பின்நின்று; குறை வேண்டிய குறை மறாமல் - தன் வேண்டுகோளை மறுக்காத வண்ணம். கொடா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது பகற்குறி இரத்தல் எனவும் படும். (19) நாள்வேங்கை பொன்விளையு நன்மலை நன்னாட! கோள்வேங்கை போற்கொடியா ரென்னையன்மார் -கோள்வேங்கை யன்னையா னீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது. [கையுறை மறை.] (பத.) நாள் வேங்கை - அன்று பூத்த வேங்கைப் பூக்கள், பொன் விளையும் - பொன் போன்ற தாதுக்களை மிகுவிக்கும், நல்மலை - நல்ல மலைகளையுடைய, நல் நாட - நல்ல நாட்டிற்குரிய தலைவனே! என் ஐயன்மார் - (இன்று இங்கு வரப் போகும்) என் தமையன்மார்கள், கோள் வேங்கை - வலிமைமிக்க பெரும் புலியினை, போல் - போன்று, கொடியார் - கொடுமை மிக்கவர்களாவார்கள், நீயும் - தலைவனாகிய நீயும், கோள்வேங்கை யன்னை - வலிமை மிக்க பெரும் புலியினை யொத்துளாய், (ஆதலான், நீ இங்கே இருப்பின், பெரும் போர் விளைதல் கூடும்,) யாம் - நாங்கள், அரும் தழை - நீ கொணர்ந்த அருமையான இத் தழையினை, ஏலாமைக்கு - ஏற்றுக் கொள்ளாமைக்கு, என்னை - வேறு காரணம் யாது? (இது வொழிய வேறு ஒன்றுமின்று,) நாளை - (ஆதலால் நீ இத்தழையினை) நாளைக் கொண்டு வந்தால், எளிது - (நாங்கள் ஏற்றுக் கொள்வது) எளிதாகும். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) வேங்கை நாண்மலர் பொன்விளைக்கும் நன் மலை நாடனே! கோள் வேங்கைபோற் கொடியார் என்
|