ஐயன்மார்; நீயுங் கோள் வேங்கை யனையை யாதலான் இன்று நீயும் இங்கே நிற்கின் மிகப் போர் விளையும; நீ கொணர்ந்த தழையை யாங்கொள்ளாமைக்கு வேறு காரண மென்னை? நாளை நீ கொண்டு வந்தால் எளிது. (விரி.) கையுறை மறை - தலைவன் தலைவியின் கையிற் சேர்க்கும் பரிசாகக் கொண்டுவந்த பொருளை யாதா மொன்று கூறித் தோழி முதலியோர் மறுத்தல். இக்கையுறை பெரும்பாலும் பூக்கள் அல்லது இளந்தளிர்களாக இருக்கக்கூடும். இச்செய்யுளினை நச்சினார்க்கினியர், "கையுறை மறுத்துப் பின்வருக," என்றது என்பர். "அருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது," என்ற தொடர் அவ்வுரையினை வலியுறுத்துமாறு காண்க. ஆல் - அசைநிலை. (20) பொன்மெலியு மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைக ளென்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றாற்றா னுண்கண்ணி வாடா ளுடன்று. [ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்று கொண்டு கையுறை யெதிர்ந்தது.] (பத.) பொன் மெலியும் - (உருக்கி வார்த்த) பொன்னைப் போன்று ஒளிவிட்டுக் காணும், மேனியாள் - வடிவினையுடைய தலைவியின், பூ சுணங்கு - வேங்கைப் பூப்போன்ற தேமல்கள் படர்ந்த, மெல் முலைகள் - மெதுவான முலைகள், என் - எதற்காக, மெலிய - (யான்) வருந்தும்படி, வீங்கின - புடைத்துப் பருத்துக் காண்கின்றன, பாவம் என்று - ஐயோ என்று சொல்லி, மெலிவிற்கு - நீ வீணே வருந்துதற்கு, என் - காரணம் யாது? (ஒன்று மின்று,) அண் கண்ணி - (நீ கொண்டு வந்த) இக் குறுங் கண்ணிகள், வாடாமை - (வீணே) வாடிப்போக வகையாக, யான் - நான் (தலைவிபால் கொண்டு சென்று,) நல்ல என்று - (இக்கண்ணிகள்) நல்லன வென்று, ஆற்றான் - வழிபடுத்திக் காட்டினால், உண் கண்ணி - மை தீட்டப் பெற்ற கண்களையுடைய தலைவி, உடன்று -
|