23

நின் ஐயர் திறைகொண் டொழுகுவார்,இப்புனத்தின்கட் பிறர் வருவாரை ஓரம்பினா லெய்து போக்குவர்; யான் பிழைத்துப் போகாதவகை நின் கண்ணென்னு மிரண்டம்பினால் எய்தாய் இன்று.

(விரி.) திறை - கப்பப் பொருள். தாம் - அசைநிலை. ஓரம்பாற் போக்கலும், ஈரம்பாற் போக்காமையும் ஆய சொன்னயந்தெளிக. இதனை, "இடம் பெற்றுத் தழா அல் - தலைவியின் குறிப்பறிந்து சார்ந்து தழுவல்," எனலுங் கூடும். அன்றி-அல்லாமல். சார்கிலாத - நெருங்க முடியாத.

(22)

பெருமலை தாநாடித் தேன்றுய்த்துப் பேணா
தருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
யேணழிதற் கியாமே யினம்.

[நின்னாற் குறிக்கப்பட்டாளை யானறியேன் என்ற
தோழிக்குத் தலைமகன் கூறியது; அல்லது.
பாங்கற்குக் கூறியதூஉமாம்.]

(பத.) பெருமலை - பெரிய மலைப்பக்கங்களெங்கும், தாம் நாடி - தாம் புகுந்து தேடி, தேன் துய்த்து - அகப்பட்ட தேன் முழுவதையும் குடித்து, பேணாது - சிறிதும் பொருட்பண்ணாது, அருமலை - அரிய மலைகளைப் போன்ற யானைகளை, மாய்க்குமவர் - அகப்படுத்திக் கொள்பவர்களுடைய, தங்கை - பின்னவளாகிய தலைவியினது, திரு முலைக்கு - அழகிய முலைகளின்மீதே (கொண்ட விருப்பினாலே,) நாண் அழிந்து - நாணத்தைத் துறந்து, நல்ல - நன்மைகட்குக் காரணமான, நலன் - அறிவு முதலிய அரும் பண்புகள் நான்கும, அழிந்து - கெடப் பெற்று, நைந்து - தளர்ந்து, உருகி - வருந்தி, ஏண் - வலிமை, அழிதற்கு - கெட்டலையு நிலைக்கு, யாம் - நாம், இனம் - எடுத்துக்காட்டாக அமைந்தோம். (என்று தலைமகன் கூறினான்.)

(ப-ரை.) பெருமாலை யெங்கும் தாம் புக்கு நாடித் தேன் வாங்கி நுகர்ந்து மனத்தின்கண் நுடங்கிப் பாதுகாவாது