4

என்று) கூவியும், கிளி - (தினைக்கதிரிற்படியுங்) கிளிகள் ஆர்த்து எழா - (அவள்குரல் கிளிக்குரல்போல் மாறிய தன்மை கொண்டு) ஆரவாரித்துச் செல்வதில்லை. (ஆகலின் பிறரைத் தினைப்புனங் காவற்கிட்டுத் தலைவியினை வீட்டிற் கழைத்துக் கொள்ளப் போகின்றனர், என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) சந்தனங்களை வெட்டியுழுத சாரலின்கண், வித்திய ஏனலின்கட் படிந்த கிளிகளை, சந்தனங்களைக் காலாக எறிந்து செய்த, பரண்மிசை யிருந்து, பூசிய சாந்தம் எங்கும் பரந்து கமழ உலாவி, கடிகின்ற கார்மயி லன்னாள் தான் வாய்திறந்து 'ஆயோ' என் றியம்புதலாற் றம்மின மென்று கிளிகள் ஆர்த்துப்போகா.

(விரி.)பகற்குறி - பகற்காலத்தே தலைவனும், தலைவியுந் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இது தினைப் புனத்தி னருகேயுள்ள பூஞ்சோலைக்கண்ணதாகும். இப்புணர்ச்சி களவின்கண் பாங்கியிற் கூட்டத்தின்பாலதாம். செறிப்பு அறிவுறீஇயது - தலைவியை வீட்டின்கண் கொண்டுசேர்த்தலைத் தலைவனுக்குத் தெரிவித்தது. தலைவி முதுக்குறைவுற்றுத் தலைவனைக் கூடிக் களிக்கத்தொடங்கியமையால், அவள் குரல் பெண்தன்மை மிகுந்து மென்மைப்படுதலின்கிளிகள் ஆர்த்து எழாவாயின வென்க. இனி “சாந்த மறைத்த இதண்,” எனப் பாடங் கூறிச் சந்தனத் தழைகளால் மறைத்து அமைத்த பரண் எனப் பொருள் கூறுவாரு முண்டு. முதுக்குறைவு - பேரறிவு: இன்ப வாழ்வி னுணர்ச்சி.

(3)

கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை
யாடா வடகினுங் காணேன்போர்-வாடாக்
கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாண் மயிர்.

[தலைமகள் இற்செறிந்த காலத்துப் புனத்தின்கண்
வந்த தலைமகன் றலைமகளைக் காணாது ஆற்றாது
பெயர்கின்றான் சொல்லியது]

(பத.) கோடா - மாறுபடுத லில்லாத, புகழ் - நற்பெயரைக்கொண்ட, மாறன் - பாண்டியனது, கூடல் - மதுரையம்பதியினை,