போலப் பெருகாநின்றது,ஏதிலார் விரும்பும்படி நம் அலரானது; ஆதலான் நம்முள்ளம் ஒருநாளுமன்றியே பலநாளும் நெகிழ்ந்து உருகாநின்றது (விரி.) ஆல் - அசைநிலை. அன்று - அன்றி: எதிர்மறை வினையெச்சம் செய்யுட்கண் உகரவீறு கொண்டு வரலாயிற்று. சொல் எடுக்கப்படல் - தோழி தலைவியினிடத்து. "அவர் போவதற்கு முன்னே நம் வருத்தத்தை வெளிப்படக் கூறு," எனச் சொல்லல். இதனைத் தொல்காப்பியர், "உரையெனத் தோழிக் குரைத்தல்," (தொல். கள. 21.) என்பர். (41) கவளக் களிப்பியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற் - பவளக் கடிகை யிடைமுத்தங் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு. [நயப்பு; கையுறையுமாம்] (பத.) கவளம் - தீனித்திரளை (யையுண்டதனாலே), களிப்பு - கிளர்ச்சியாகிய, இயல் - தன்மை மிக்க, மால் யானை - மதமிக்க யானையானது, சிறு ஆளி - யாளியின் சிறு குட்டி, தவழ - நடை கற்கும் பருவத்திலும் (அதற்கு முன்,) நில்லாது - (அஞ்சி யெதிர்த்து) நிற்கமாட்டாது, அது போல் - அதனைப் போன்று, பவளக் கடிகை - பவளத் துண்டமாகிய (தலைவியின்) வாய் இதழ்களின், இடை - நடுவே (தோன்றும்,) முத்தம் - பற்களாகிய முத்துக்களை, காண் தொறும் - காண்கின்ற வேளைகளிலெல்லாம், கையிடை- (தலைவியின்,) கைகளிலணிந்துள்ள, தொடி - வளைகளில் (அழுத்தியுள்ள,) முத்தம் - முத்துக்கள், தொக்கு - ஒன்று கூடியும், நில்லா - ஒப்புமையாக நிற்க வியலாது தோற்கும். (என்று தலைவன் தோழியிடங் கூறினன்.) (ப-ரை.) கவளத்தையுடைய களிப்பியன்ற மால் யானை, அரிமாவின் குருளைதான் நடைகற்கும் பருவத்தும் அஞ்சி யெதிர் நில்லாதது போல, இவளுடைய அதரமாகிய பவழத்துண்டத்தினிடை யரும்பும் முறுவலாகிய முத்தங்களைக் காணுந்தொறுந் தோற்று நில்லா, இவள் கையிடைத்
|