59

அரிது - முடியாத தொன்றாகும், (மேலும்) நெறி - வழிகளில், திரிவார் இன்மையால் - (அடிக்கடி) நடந்து செல்லும் மக்கட் பழக்கம் இல்லாதபடியாலே. இல்லை - (நல்லதொரு வழியே) இல்லையாகும். (ஆகலின், நீ இரவுக்குறியின்கண் வருதல் ஏதமாம், என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) யார்க்கும் அறிதலரிது; ஓசையையுடைய நீர்ச் சேர்ப்பனே! எங்குந் திரிவா ரில்லாமல் வழியில்லை; தளிர் சுருண்டிருந்த கண்டலும், அழகிய தண் டில்லைகளும். தம்முண் மிடைந்து கழியைச் சூழ்ந்த மிண்டன் மரங்களும், தாழைகளும் இடைப்பட்டு.

(விரி.) அறிகு - தொழிற் பெயர். கண்டல் - ஒரு வகை மரமுமாம்; "முறிதிரிந்த," என்ற அடைமொழி கொண்டு நீர் முள்ளி என்றாம். மிண்டல் - ஒருவகை மரம் எனலுமுண்டு. தில்லை - ஒருவகை மரம்.

(62)

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகி
னல்லார் விழவகத்து நாங்காணே - நல்லாய்!
உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பனொப் பாரைச்
சுவர்க்கத் துளராயிற் சூழ்.

[தலைமகளை ஒருநாட் கோலஞ் செய்து அடியிற்கொண்டு
முடிகாறு நோக்கி. 'இவட்குத் தக்கான் யாவனாவன்
கொல்லோ?' என்றாராய்ந்த செவிலிக்குத்
தோழி அறத்தொடுநின்றது]

(பத.) நல் ஆய் - நல்ல எமது அன்னையே! வேலாழி - கடலினாலே. சூழ் - சூழப் பெற்ற, உலகில் - இவ்வுலகத்தினிடத்தே, வில்லார் - விற்போரில் வல்ல வீரர்கள் (கூடி நடத்தும்,) விழவினும் - வில்விழாக் கூட்டத்தினும், நல்லார் - நல்ல பெண்களின் (மணங்காரணமாகக் கூடிய,) விழவு அகத்தும் - மணவிழாக் கூட்டத்தினும், உவர்க்கத்து - (அன்று) கடற்கரையினிடத்து, ஒரோ உதவி - (இவட்கு) ஒப்பற்ற உதவியினைச் செய்த, சேர்ப்பன் - கடற்றுறை முகத்துக்குரியானை, ஒப்பாரை - ஒத்த ஆடவரை, நாம் காணேம் - நாங்கள் காணவில்லை, (ஆகலின், இவட்குத்