வினைவிளையச் செல்வம் விளைவதுபோ னீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித்-தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண். [தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது.]
(பத.) மையார் - மைதீட்டப்பெற்ற, தடம் - பெரிய கண் - கண்களையுடைய, மயில் அன்னாய் - மயிலையொத்த தலைவியே! நீடா -(நம்மை விட்டு) நீங்கிப்போத லில்லாத பனை - பனையென்னும் அளவினைப் போன்று மிக்க விளைவு - இன்பமாகிய விளைவினை, நாம் எண்ண - நாம் (களவுப் புணர்ச்சியில்) எதிர் பார்த்துக்கொண்டிருக்க, (அதற் கிடையூறாக,) வினை விளைய - (ஒருவனுக்கு) நல்வினை பெருகுதலினாலே, செல்வம் - பொருள், விளைவது போல் - பெருகுவது போல, பாத்தி - பாத்தியின்கண்ணே, தினை விளைய - தினைப்பயிரானது விளைந்து போனபடியினாலே, தீ தீண்டு - நெருப்புப் படுதலினாலே, (வேம்,) கையார் - (வேங்) கையார் (வேங்கைமரம்,) பிரிவித்தல் - பூத்தலாகிய வினையினாலே தினை கொய்ய வேண்டிய நாள் அடுத்ததென்று நம்மவர்க்குத் தெரிவித்து) நம்மைத் தலைவனினின்றும் (இற்செறிக்கையால்) பிரியச் செய்தலை காண் - காண்பாயாக. (என்று தோழி தலைவியினிடங் கூறினாள்.) (ப-ரை.) கெடாத பனை யென்னு மளவு போன்ற அளவினையுடைய இன்ப விளைவினை நாமெண்ணி யிருப்ப அதற்கிடையூறாக, நல்வினை விளையச் செல்வம் விளைவது போலப், பாத்தியின்கட் டினைவிளைதலான், மையார் தடங்கண் மயிலன்னாய்! தினைகொய்ய நாட்சொல்லி வேங்கையார் நம்மை இங்குநின்றும் பிரிவித்தலைப் பாராய். (விரி.) பனை - பேரளவினைக் குறிக்குஞ் சொல். தினை - அதற்கெதிரானது. தீத்தீண்டுகையார் - குறிப்பு மொழி, வேங்கை மரத்தினை வேங்கையார் என்றது எள்ளல்பற்றிய தென்க. தினைப்புனத் தருகேயுள்ள வேங்கை மரங்கள் பூக்குமாயின், தினை முதிர்ந்து கொய்யப்பட்டுத் தலைவி
|