(பத.) பொன் - பொன்னினது, நோக்கம் - கட்சியினை, கொண்ட - பெற்றுள்ள, சுணங்கு - தேமல்களை, அணி - அழகாகப் பெற்றுள்ள, மெல் முலை - மென்மையான முலைகளையுடைய, கொம்பு அன்னாய் - பூங்கொம்பினை யொத்த பூவையே! நின் - உன்னுடைய, நோக்கம் - பார்வையின் தன்மையை கொண்ட - மேற்கொண்டுள்ள, மான் - மான்களை, காண் - பாராய், தண் - குளிர்ந்த, குரவ நீழல் - குராமரத்தினது நிழலின் நேர்மையினை, (காண் -) காண்பாயாக, பொன் - பொன்னினது, நோக்கம் - காட்சியினை, கொண்ட - கொண்டுள்ள, பூ - பூக்களை யுடைய, கோங்கம் காண் - கோங்கமரங்களைக் கண்டு களிப்பாய், மணல் மேல் - இவ்வழகிய மணலிடத்தே, வந்து - வருதலைச் செய்து, வண்டல் அயர் - விளையாட்டினை மேற்கொள்வாயாக. (என்று தலைவன் தலைவியை நோக்கிக்கூறி அவளுக்கு உள்ளக் கிளர்ச்சியை யுண்டாக்கினான்.) (ப-ரை.) நின்னுடைய நோக்கின் றன்மையைக் கொண்ட மான்களைப் பாராய்; குளிர்ந்த குரவ நீழலைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட பூங்கோங்குகளைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட சுணங் கணிந்த மென்முலையையுடைய கொம்பன்னாய்! மணன்மேல் வந்து விளையாட்டை விரும்பாய். (விரி.) ஆற்றுவித்தல் - பொறுமையை மேற்கொளச் செய்தல். நீழல் - நீட்டல் விகாரம். வண்டல் - மகளிர் விளையாட்டு. போவான் - செல்ல வேண்டி. (71) அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழையு மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக இருசுடரும் போந்தனவென் றார். [சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையுந் தலைகளையுங் கண்டார் சொல்லிய வார்த்தையைக் கேட்டாராகச் சிலர் சொல்லியது.]
(பத.) அம் சுடர் - அழகிய மதிபோன்ற, நீள் - மிகுந்த, வாள் - ஒளியினையுடைய, முகத்து - முகத்தோடு
|