கூடிய, ஆயிழையும் - ஆராய்ந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட தலைவியும், மாறு இலா - எதிரில்லாத, வெம் சுடர் - வெய்ய ஒளியினையும், நீள் - நீட்சியினையுங் கொண்ட, வேலானும் - வேலினையுடைய தலைவனும், போதர - இச்சுரத்திலே செல்ல, கண்டு - பார்த்து, அஞ்சி - அச்சமுற்று, ஒரு சுடரும் - (இரு சுடர்களில்) ஒன்றும், இன்றி - (தோற்றம்) இல்லாமல், உலகு - உலகமெல்லாம், பாழ் ஆக - கெடும்படி, இருசுடரும் - அவ்விரண்டு சுடர்களும், போந்தன - (அச்சுரத்தின் கண்ணே,) போயின, என்றார் - என்று (கண்டார் சிலர்) சொன்னார்கள், (என்று கேள்விப்பட்டார் சிலர் செவிலியை எதிர்ப்பட்டுச் செப்பினார்கள்.) (ப-ரை.) அழகிய மதிபோன்ற நீண்ட ஒளியையுடைய முகத்தாயிழையும் எதிரில்லாத வெஞ்சுடர்நீள் வேலானும் இச்சுரத்தின்கண்ணே போதரக்கண்டு அஞ்சி, இரு சுடருள் ஒருசுடருமின்றியே உதயம் பழாம் வகை இரு சுடரும் அச்சுரத்தே போந்தன என்று கண்டார் சிலர் சொன்னார். (விரி.) போதரல் - செல்லல். இருசுடர் - கதிர் மதிகள். இச்செய்யுளின் கருத்தை நச்சினார்க்கினியரும், "இடைச் சுரத்துக் கண்டோர் கூறிய் வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது," (தொல். அகம். 410.) என விளக்குவர். (72) முகந் தாமரைமுறுவ லாம்பல்கண் ணீல மிகந்தார் விரல்காந்த ளென்றென் - றுகந்தியைந்த மாழைமா வண்டிற்கா நீழல் வருந்தாதே யேழைதான் செல்லு மினிது. [சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகளைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது] (பத.) (தலைமகளின்) முகம் - முகத்தினை, தாமரை - தாமரை மலர், என்று - எனக் கருதியும், முறுவல் - பற்களையுடைய வாயினை, ஆம்பல் - ஆம்பல் மலர், என்று - எனக் கருதியும், கண் - கண்களை, நீலம் - நீலோற்பல
|