இற்செறிக்கப் படுவாளாதலின், "வேங்கையார் பிரிவித்தலைக் காண்," எனக் கூறப்பட்ட தென்க. (5) மானீல மாண்ட துகிலுமிழ்வ தொத்தருவி மானீல மால்வரை நாட! கேண் - மாநீலங் காயும்வேற் கண்ணாள் கனையிருளி னீவர வாயுமோ மன்றநீ யாய். [இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது.] (பத.) மால் நீலம் - பெரிய நீலமணிவரை, மாண்ட - நேர்த்தியான, துகில் - வெள்ளாடையினை, உமிழ்வது - வெளிவிடுவதனை, ஒத்து - போன்று, அருவி - நீர்வீழ்ச்சிகள், மால் - மயங்கிக் (கலந்து) காணப்படும்படியான, நீலம் - நீலநிறத்தோடு கூடிய, மால் - பெரிய, வரை நாட - மலைநாட்டிற் குரிய தலைவனே! கேள் - (யான் சொல்வதைக்) கேட்பாயாக, மா - கரிய, நீலம் - நீலோற்பல மலர்களை, காயும் - வெறுத்தொதுக்குதற்குக் காரணமான, வேல்கண்ணாள் - வேலினைப் போன்ற கண்களையுடைய தலைவி, கனை இருளில் - மிகுந்த இருள் நிரம்பிய நள்ளிரவிலே, நீ வர - நீ வருதலைச் செய்ய, (அதனால், நினக்கு இடையூறு இல்லாமையினை,) ஆயுமோ - ஆராய்ந்து கண்டு பிடித்து மனவமைதியை அடையவல்லளோ? நீ மன்ற ஆய் - நீ அதனைச் சிறிது உண்மையாக நினைத்துப் பார்ப்பாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) மிக்க நீலமணிவரை மாட்சிமைப்பட்ட வெண்டுகிலை யுமிழ்வதுபோல, அருவிகள் மயங்காநின்ற நீல மால்வரை நாடனே! கேளாய்; கரிய நீல மலர்களை வெகுளா நின்ற வேல்போன்ற கண்ணாள், செறிந்த இருளின்கண் நீவர, நினக் கிடையூறில்லாமை ஆராய வல்லளோ? உண்மையாகப் பாராய். (விரி.) இரவுக்குறி - தலைவனும் தலைவியும் களவுப் புணர்ச்சியில் இராக்காலத்தே தம்முள் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இது தலைவியின் இல்லினையடுத்த தோப்பின் கண்ணதாம். நீலம் - பண் பாகுபெயர், “மாண்டதுகில்”
|