மலர் (என கருதியும்,) இகந்து - ஒன்றினையொன்று ஒவ்வாது கடந்து, ஆர் - அமைந்துள்ள, விரல் - விரல்களை, காந்தள் - காந்தள் அரும்பு (எனக் கருதியும்,) உகந்து - அவ் வுறுப்புகளை விரும்பி, இயைந்த - தலைவியோடு நெருங்கி வாழும், மாழை - கூட்டமாகிய, மா - சிறந்த - வண்டு இன் கு - வண்டுகளுக்கு, ஆம் - தக்கதான, நீழல் - நிழல் வழியாக, ஏழை - நின்மகள், வருந்தாது - துன்புறாது, இனிது - நன்றாக, செல்லும் - செல்லா நின்றாள். (ஆகலின், நீ வீணே வருந்துத லொழிக, என்று செவிலியை நோக்கி எதிர்ப்பட்டார் சிலர் கூறினார்கள்) (ப-ரை.) இவள் முகம் தாமரை மலர், இவள் முறுவலையுடைய வாய் ஆம்பல் மலர், இவள் கண் நீல மலர், ஒன்றை யொன்றொவ்வாது கடந் தார்ந்த விரல்கள் காந்தளரும்பு என்று கருதிக் காதலித்துப் பொருந்திய மாழைமா வண்டிற்குத் தக்க நீழலிலே வருத்தமின்றி நின்னுடைய ஏழை செல்லாநின்றாள் இனிதாக. (விரி.) தான் - அசைநிலை. "தலைமகளைக் கண்டார் சுரத்திடைச் சென்ற செவிலியை எதிர்ப்பட்டுச் சொல்லி ஆற்றுவித்தது," எனக் கருத்தினைத் தெரிவிக்குந் தொடரை மாற்றி வருவித்துப் பொருள் கொள்க. தலைவி துன்புறுதற் கில்லாத நிழல் என்பார், "இயைந்த வண்டிற் காநீழல்," என்றார். (73) செவ்வாய்க் கரியகட் சீரினாற் கேளாதுங் கவ்வையாற் காணாது மாற்றாது - மவ்வாயந் தார்த்தத்தை வாய்மொழியுந் தண்கயத்து நீலமு மோர்த்தொழிந்தா ளென்பேதை யூர்ந்து. [முன்னைஞான்று உடன்போக்கு வலித்துத் தலைமகனையுந் தலைமகளையும் உடன்படுவித்துப் பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையாற் றலைமகனைக் கண்டு தோழி உடன்போக்கு அழங்குவித்தது] (பத.) (தலைவனே!) என் பேதை - என்னுடைய தலைவி, கவ்வையால் ஊர்ந்து - ஊரவர் கூறும் பழிச் சொற்களால் முன்பு உடன் போக்கை மேற்கொண்டு,
|