77

தலைவி தான் ஆற்றுவல் என்பது தோன்ற அவர் சென்று செவ்வனே திரும்புவராக, என்று சொல்லியதாகு மிச் செய்யுள், அருகல் - அணைதல்: அடுத்தாதல்.

(79)

சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றா
னின்றார்சொற் றேறாதாய்! நீடின்றி - வென்றா
ரெடுத்த கொடியி னிலங்கருவி தோன்றுங்
கடுத்த மலைநாடு காண்.

[பருவங் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது]

(பத.) செறி தொடி - கைகள் நிறைய வளையணிந்த காரிகையே! வென்றார் - போரின்கண் வெற்றியுற்றவர், எடுத்த - உயர்த்துக் கட்டிய, கொடியின் - கொடியாகிய வெண் சீலையினைப் போன்று, கடுத்த - வேனிலால் வறண்ட, மலைநாடு - இம்மலை நாட்டில், இலங்கு அருவி - (கார்ப் பெயலால்) விளங்காநின்ற நீர்வீழ்ச்சி, தோன்றும் - காணப்படும். (ஆகலான்,) சென்றார் - (பொருள் வேண்டி நம்மைப் பிரிந்து) சென்ற தலைவர், வருதல் - (திரும்பி நம் மாட்டுச்) சேறல், சேய்த்து - சேண்மைக்கண் உள்ளது, அன்று - அல்லாது (அண்மைக் கண்ணதாயிற்று,) நின்றார்-நின்மாட்டு இருந்து பழகிய தலைவரின், சொல் - சொற்களின் உறுதிப் பாட்டினை, தேறாதாய் - தெரியாதவளே! நீடு இன்றி - கால நீட்டிப்பு இன்றி (இன்றிரவின்கண்,) காண் - (தலைவனைக்) கண்டு களிப்பாயாக. (என்று தோழி தலைமகளிடத்திற் சொல்லினாள்.)

(ப-ரை.) நம்மைப் பிரிந்து போயினார் வருதல் செறி தொடி! சேய்த்தன்றால்; நின்மாட்டு நின்றொழுகுகின்றாருடைய சொற்களைத் தெரியாதாய்! போரின்கண் வென்றாரெடுத்த கொடிகள் போலத் தெளிந்திலங்கருவி தோன்றா நின்றது மிக்க மலை நாடு; ஆதலால், நீடின்றி இன்றே இரவின்கட் காண்பாயாக.

(விரி.) செறி தொடி - வினைத் தொகை யன்மொழி; அண்மை விளி கொண்டுள்ளது. ஆல் - அசைநிலை. இது குறிஞ்சியின்கண் வந்த பாலைத் திணை. பாலைக்கு நில மின்மையின் நான்கு நிலங்களில் யாதா மொன்றின்கண்