85

என்றார். இது தலைவன் பிரிவைத் தெரிவித்த தோழிக்குத் தலைவி கூறியதாகும்.

(86)

ஒன்றானு நாமொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்கரிதாச் சேய சுரம்.

[புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத்
தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது]

(பத.) பின்றா - பின் வாங்காத, வெலற்கு அரிது ஆம் - வெல்லுதற்கு அரிதாகிய, வில் - விற் போரிலே, வலான் - வன்மை மிக்கவனாகிய, வேல் - வேல் கைக் கொண்ட, விடலை - மணவாளன், பாங்கா - பக்கத்தே துணையாய் வர, சேய - தொலைவான, சுரம் - பாலை நிலவழியினை, செலற்கு அரிது ஆ - செல்லுதற்கரியதாக, ஒன்றானும் - யாதாயினும், நாம் மொழியலாமோ - நாம் சொல்லுதல் கூடுமோ? (கூடாது,) பேணும் - யாவரும் விரும்பும், புகழான் - புகழினைக் கொண்ட நம் தலைவனின், பின் செலவு - பின்னே செல்லுதல், பின்றாது - ஒழுக்கத்திற் பிறழாத தொன்றேயாம். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) பிறழாத வெலற்கரிதாகிய வில்லினை வல்லானாகிய வேல்விடலை தான் துணையாகச் சுரத்தைச் செலற்கரிதாக யாதானுஞ் சொல்லலாமோ? அப் பேணும் புகழான் பின்சேறல் ஒழுக்கத்திற் பிறழாது காண்.

(விரி.) நயப்பித்த - விரும்புவித்த. உடன்படல் - சம்மதித்தல் தான் - அசைநிலை. விடலை - பாலை நிலத்தலைவன் என்றுமாம். "பேணும் புகழான்," என்றது உடன் போக்கிற் றீங்கின்மை குறித்து நின்றது.

(87)

அல்லாத வென்னையுந் தீரமற் றையன்மார்
பொல்லா தென்பது நீபொருந்தா - யெல்லார்க்கும்
வல்லி யொழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்!
புல்லி யொழிவான் புலந்து.