[புணர்ந்து உடன்போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது] (பத.) வகைமை - நேர்த்தியான, நீள் - நீண்ட, வாள் - வாளினைப்போன்ற, கண்ணாய் - கண்களையுடைய தோழியே! புல்லி - (உடன்போகின்ற என்னைத் தலைவன்) தழுவிக் கொண்டு, ஒழிவான் - செல்ல வேண்டி, புலந்து - மனத்தின்கண் மாறுபட்டு நீங்குதற்கு, வல்லி - வல்லையாய், ஒழியின் - (என்னை நீங்கி மனைக்குச்) செல்வாயாயின், ஐயன்மார் - நம்மையன்மார் கூறும், அல்லாத - (ஆண்மைக்குப்) பொருத்தமில்லாத மொழிகளினின்றும், என்னையும் - என்னையும் என் தலைவனையும், தீர - நீக்கி, பொல்லாது என்பதும் - எம்மாட்டுப் பொல்லாப்புண்டு என்று கருதுங் கருத்தினையும் நீக்கி, நீ எல்லார்க்கும் பொருந்தாய் - நீ எல்லோருக்கும் நல்லவளாகப் பொருந்தியிருப்பாயாக. (என்று தலைவி தோழியினிடங் கூறினாள்.) (ப-ரை.) எம்பெருமானோடு பொருந்தி இங்கு நின்றும் ஒழிந்து போவதற்கு முன்பு வேறுபட்டு மற்றதன்கண் அல்லாத வென்னை நீ இங்கே யிருந்து நம் மையன்மார் பொல்லாத தென்று கொள்ளும் மனத்தின் கண்ணுள்ள கோளினையுந் திருத்தி நீ பொருந்தாய்; எல்லார்க்குந் தத்த மனத்தின்கணுள்ள வேறுபா டொழியுமாயின், வல்லி போன்றிரு வாட்கண்ணாய்! அல்லதூஉம், உடன்போகின்ற என்னைப் புல்லிக் கொண்டொழிவான் வேண்டி மனத்தின்கட் புலந்து நீங்குதற்கு வல்லையாயொழியின், வகைமையையுடைய நீண்ட வாட்கண்ணாய்! ஆண்மையல்லாத வுரைகளை என்னை நீக்கி, நம்மையன்மார் பொல்லாத தென்னுங் கருத்தினையும் நீக்கி எல்லார்க்கும் பொருந்துவாயாக, என்றுமாம். (விரி.) ஒருப்படல் - தீர்மானித்துப் புறப்படத் தொடங்கல். வகைமை - ஒழுங்கு, நேர்த்தி, வல்லி - முன்னிலை யொருமைக் குறிப்பு வினை முற்று. ஐயன்மார் - தந்தை தமையன்மார். ஆண்மைக்குப் பொருத்த மில்லாத மொழிகள் - தலைவன் தலைவியரின் ஒப்பற்ற காதல் கருதாது வெறும் வீரமேகருதும் வஞ்சின மொழிகள். பொல்லாப்பு - வீட்டைவிட்டுச் செல்லுதலாகிய குற்றம். தலைவி தோழியை மனைக்குச் சென்று தன் போக்காலுண்டாம்
|