87

மனைக் குழப்பங்களை அவ்வப்பொழுது வேண்டியன கூறியடக்கி, தன் பெருமைக்கு இழுக்கு வாராவகை நடந்து கொள்ளுமாறு கூறுவதாகு மிது. தலைவி உடன்போக்கிற் புகுவது தன் கற்பிற்குப் பழுது நேருவதைத் தடுப்பதற்காகவே யாதலான், அவ் வுண்மைகளைப் பெற்றோர் முதலியவர்கட்குத் தெரித்துத் தன் பெருமையினைக் காக்கவேண்டலாயினள். பழைய வுரை இரண்டில் பின்னது விளக்கமும் எளிமையும் பெற்றுள்ளமை காண்க. மற்று - அசைநிலை.

(88)

நண்ணிநீர் சென்மி னமரவ ராபவே
லெண்ணிய வெண்ண மெளிதரோ - வெண்ணிய
வெஞ்சுட ரன்னானை யான்கண்டேன் கண்டாளாந்
தண்சுட ரன்னாளைத் தான்.

[சுரத்திடைச் சென்ற செவிலிக்குத்
தலைமகனையுந் தலைமகளையுங் கண்டமை
எதிர்ப்பட்டார் சொல்லி ஆற்றுவித்தது]

(பத.) நீர் எண்ணிய - நீர் கருதிக்கொண்டு தேடிவருகின்ற, வெம் சுடர் அன்னானை - வெப்ப மிக்க ஞாயிறு அனைய தலைவனை, யான் - நான், கண்டேன் - எதிராகப் போகப் பார்த்தேன், தண்சுடர் அன்னாளை - குளிர்ந்த மதியை யொத்த மாதரசியை, தான் - இவள், கண்டாளாம் - எதிராகப் பார்த்தாளாம், அவர் - அவ்விருவரும், நமர் ஆபவேல் - நம்மவர்களாவாராயின், நண்ணி - விரைந்து செல்லுதலில் மனம் பொருந்தி, சென்மின் - செல்வீராக, (அங்ஙனம் விரைந்து செல்வீராயின்,) எண்ணிய - அவ்விருவரையும் சென்று காணவேண்டுமென்று நினைத்துள்ள, எண்ணம் - கருத்து, எளிது - இலகுவில் முடிவதாகும். (என்று செவிலியை எதிர்ப்பட்ட கணவன் மனைவியராகிய இருவரிற் கணவனாகிய ஆடவன் செவிலியிடங் கூறினான்.)

(ப-ரை.) பொருந்தி நீர் சென்மின்; அவரும் நமக்குச் சுற்றத்தாராயின், நீர் அவரைச் சென்றெய்த வேண்டுமென்று எண்ணிய எண்ணம் எளிது; நீர் கருதிய வெய்ய