உலகத்தாார் கூறும் நற்குணத்தினை யுடையனாய் எல்வளையை உடன் - கொண்டுபோனவன் என்மனைக்கே மணஞ் செய்வதாகக் கொண்டு வருமோ? அஃதன்றி, யாம் வெறாகத் தன் மனைக்கே மணஞ்செய்யக் கொண்டு போமோதான்? (விரி.) ஓ, தான் - அசைநிலைகள். "தன்னும் அவனும்," என்று தொடங்குகிற தொல்காப்பிய (அகம்-36)ச் சூததிரத்துள் "தனக்கும் தலைவன் தலைவியர்க்கும் வரக் கடவ நன்மை தீமைகளை நன்றாய் ஆராய்வள்," என்ற கருத்தின்படி இங்கு, நற்றாய் படிமத்தாளாகிய தேவ ராட்டியிடம் எதிர்கால நிகழ்ச்சியினைப்பற்றி வினவலாயினள். இது தலைவியின் உடன்போக்கிற்குப் பின் நிகழ்வதாம். கழங்கு - குறி பார்க்கும் கருவி. (90) கள்ளிசார் காரோமை நாரில்பூ நீண்முருங்கை நள்ளியவேய் வாழபவர் நண்ணுபவோ - புள்ளிப் பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண் டிருந்துறங்கி வீயு மிடம். [தலைமகன் செலவுடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது] (பத.) புள்ளி - புள்ளிகளையுடைய, பருந்து - பருந்துகள், கழுகு ஒடு - கழுகுகளுடனே, வம்பலர் - புதிதாக வழிச்செல்வாரை, பார்த்து - (கொண்டுபோம் பொருளைக் கொள்ளை கொளவான்) எதிர்பார்த்து, ஆண்டு - அவ்விடத்து, இருந்து - தங்கி, உறங்கிவீயும் - (கொள்ளை கிடையாமையால்) உறங்கி விழுதற் கிடமான, கள்ளி சார் - கள்ளிச்செடிகளை யடுத்த, கார் - கரிய, ஓமை - மாமரங்களும், நாரில் - நாராகிய பற்றுதலில்லாத, பூ - பூக்களையுடைய, நீள் - நீண்டு வளர்ந்த, முருங்கை - முருங்கை மரங்களும், நள்ளிய - மிகுந்த, வேய் - மூங்கிற் புதர்களும் (நிறைந்த), இடம் - இடமாகிய பாலை நில வழியே, வாழ்பவர் - நல் வாழ்க்கையை மேற்கொள விரும்பும் மக்கள், நண்ணுபவோ - செல்ல விரும்புவார்களோ? (விரும்பார்கள், என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)
|