9

டீத்தான்கொ லென்னாங்கொல்
கண்ணுளவாற் காமன் கணை.

[பின்னிலை முனியாது நின்ற தலைமகன் றோழியை
மதியுடம்படுத்தது]

(பத.) அவண் கு ஆயில் - (யான்) அவ்விடத்து வருவேனாயின், ஐவனம் - மலைநெற் குவியலுக்கு, காவல் - பாதுகாப்பு, அமைந்தது - பொருந்தியதாகும், இவண் கு ஆயில் - இவ்விடத்து (யான்) இருப்பேனாயின், செந்தினை கார் - சிவந்த தினையினையும் கருந்தினையினையும் கொண்ட, ஏனல் - தினைப்புனக்காவல் (பொருந்தியாதாகும்,) (ஆனால், நீயோ அவ்விரண்டிற்குந் தக்கனவான மறுமாற்றம் தருகின்றிலை,) இவட்கு ஆயின்-இத் தலைவியினிடத்திலோ வெனின், காமன் கணை - மதவேளின் அம்பாகிய, ஐந்து எண் - ஐந்தும், உள - உளவாயிருக்கின்றன, இரண்டு - அவற்றுள் இரண் டம்புகளை, கண்உள - கண்களில் உள்ளனவாக, ஈத்தான் கொல் - (காமன் இவளுக்கு) கொடுத்துள்ளானோ? ஆல் - ஆதலான், என் ஆம் கொல் - என் உயிர்க்கு யாது நேருமோ? (அறியேன், என்று தலைவன் தோழியிடங் கூறினான்.)

(ப-ரை.) அவ்விடத்து வருவேனாயின் நினக்கு ஐவனங்காவ லமைந்தது; இவ்விடத்தின்கண் வருவேனாயிற் செந்தினையுஞ் செறிந்த பசுந்தினையும் காத்தலே அமைந்தது; ஆதலான் எனக்கொரு மறுமாற்றந் தருகின்றிலை; நின்றோழியாகிய இவட்காயில், காமன் அம்பு ஐந்தெண்ணுளவால்; அவற்றுள் இரண்டம்பினைக் கண்ணாகக் கொடுத்தான் கொல்லோ! நின் றோழிக்குக் கண்கள் காமன்கணை யுளவால்; என்னுயிர்க்கு என்னாங் கொல்லோ?

(விரி.) பின்னிலை முனிதல் - தோழியின் பின்னின்று தன் குறை முடித்துக் கொள்ளுதலை வெறுத்தல், பழையவுரையிற் கண்டுள்ள, ‘ஆதலான்,’ என்பது பொருட் போக்கிற்கு முரண்படுதலும், அவ்விடத்து, ‘ஆனால்’, என்பது பொருந்துதலுங் காண்க, அவ்விடம் - தலைவியின் இல்லிடம். இவ்விடம் - தினைப்புனமாகிய விடம். ஆல் - அசைநிலை. செந்தினை, கார்தினை, எனத் தினையினையீரிடத்துங்