92

நான்காவது - முல்லை



கருங்கடன் மாந்திய வெண்கடலைக் கொண்மூ
விருங்கடன்மா கொன்றான்வேன் மின்னிப் - பொருங்கட
றன்போன் முழங்கித் தளவங் குருந்தணைய
வென்கொல்யா னாற்றும் வகை.

[பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.]

(பத.) கரும் கடல் - கரிய கடலின் கண்ணே (புகுந்து), மாந்திய - நீரினை நிறைய வுண்ட, வெண்தலை - வெண்மையான தலைப்பாகத்தையுடைய, கொண்மூ - மேகங்கள், இரும் கடல் - பெரிய கடலினிடத்தே (புகுந்து,) மா - மாமர வடிவுகொண்ட சூரபன்மனை, கொன்றான் - வெட்டி வீழ்த்திய முருகப்பெருமானின், வேல் - வேலினைப் போன்று, மின்னி - மின்னலைச் செய்து, பொரும் - (அலைகள் ஒன்றோடொன்று) மோதிக்கொள்ளும், கடல்போல் - கடலைப் போல, முழங்கி - இடித்து ஆரவாரித்தலால், தளவம் - செம்முல்லைக் கொடிகள் (தளிர்த்து,) குருந்து - அருகிலுள்ள குருந்த மரத்தினை, அணைய - தழுவிப் படரும்படியாக (வந்த கார்ப் பருவத்தினைக் கண்டு,) யான்-நான், ஆற்றும் வகை - பொறுக்குமாறு, என் கொல் - எம்முறையிலோ? (அறியேன், என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) கருங்கடலைப் பருகிய வெண்டலை முகில்கள் இருங்கடலின்கண்ணே புக்கு மாவினைக்கொன்ற முருகன் வேல்போல மின்னிப் பெருங்கட றன்னைப்போல முழங்குதலால் முல்லைக்கொடிகளெல்லாம் குருந்தமரத்தின்மேற் சென்றணையக் கண்டு யான் ஆற்றுந் திறம் என்னை கொல்லோ?

(விரி.) பருவம் - கார்ப் பருவம். அழிதல் - வருந்தல். "பெருங் கடல்," என்றும் பாடம். அப்பாடத்தினையே பழைய வுரையாசிரியர் கொண்டுள்ளார். முழங்குதற்குப் பெருங்கடல் என்ற பாடம் பொருந்திக் காணுதலாற் கைக்கொள்ளப்பட்டது. தளவங் குறுந் தணையுங் காட்சி தலைவியின் ஆற்றாமையை மிகுவிப்பதற்குக் கருவியாமாறு காண்க. தன், கொல் - அசைநிலைகள். முல்லையாவது