94

மேனோக்கி வெங்கதிரோன் மாந்தியநீர் கீழ்நோக்கிக்
கானோக்கங் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலா நெட்டெழுத்தின் மேற்புரியச்
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து.

[தோழி தலைமகளைப் பருவங்காட்டி வற்புறுத்தியது]

(பத.) மடம் - இளமைத் தன்மை, வாய் - வாய்த்துள்ள, மானோக்கி - மான் போன்று மருண்டு நோக்குந் தலைவியே! வெம் கதிரோன் - வெப்பத்தைக் கொண்ட பகலவன், மேல் நோக்கி - மேல்முகமாக, மாந்திய - வாங்கி யுட்கொண்ட, நீர் - நீர் நிறைந்த முகிலானது, கீழ் நோக்கி - பூமியை நோக்கிப் பெய்தபடியினாலே, கான் - முல்லை நிலமாகிய காடுகளெல்லாம், ஓக்கம் கொண்டு - தழைத்தோங்குதலாகிய நம்மையினைப் பெற்று, அழகா - அழகோடு கூடி, போது எலாம் - பூக்கள் தோறும், அரிவண்டு - இரேகைகளோடு கூடிய வண்டினங்கள், நெட்டு எழுத்தின்மேல் - நெடிய வோசையினையுடைய எழுத்துக்களின் ஒலியின்பேரிலே, புரிய - விருப்பங்கொண்டு ஒலிக்க, சாதாரி - சாதாரி யென்னும் பண்ணானது, சார்ந்து - அவ் வொலியின் சார்பாகத் தோன்றி, நின்று - நிலைபெற்று, அறையும் - ஒலிக்கும், காண் - நீ அந்நிலையினைக் காண்பாயாக. (ஆகலின், கார்ப்பருவமாகிய இப் பொழுது தலைவன் கட்டாயம் வந்து சேர்வன் என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.)

(ப-ரை.) வெங்கதிரோன் மேனோக்கிப் பருகிய நீர் கீழ் நோக்குதலால் காடெல்லாம் ஒக்கங்கொண்டு அழகாகப் போதுதோறும் அரிவண்டுகள் நெட்டெழுத்தோசைமேல் மேவிச் சாதாரி என்னும் பண்ணினைச் சார்ந்தொலியா நின்றன; மானோக்கி! இதனைக் காணாய்.

அல்லதூஉம், 'போதாரி வண்டெலாம்,' என்பது போதினைப் பரந்து இவ்வண்டெல்லாம் எனலுமாம்.

(விரி.) பருவம் - கார்காலம். நோக்கி - காரணப் பொருளில் வந்த வினையெச்சம். ஆரி = அரி - நீட்டல் விகாரம். அன்றி, ஆரி என்பதற்குப் பரந்து எனப் பொருள் கொண்டு, 'வண்டெலாம் போதினைப் பரந்து