118

ஓரேன் - அறியேன், (ஆனால்,) தண் கோடல் - குளிர்ந்த வெண்காந்தளானது (இம்மழையினாலே,) வண் துடுப்பாய் - (முதலில்) வளவிய துடுப்புப் போன்று அரும்பி, பாம்பாய் - (பின்பு) பாம்பினைப் போன்று அவ்வரும்பு நீளப்பெற்று, விரல் ஆய் - (அதன் பின்பு) விரல்கள் போல் விரிந்து, வளைமுறியாய் - (மேலும்) வளைகின்ற தளிர்கள் போன்ற இதழ்களைக் கொண்டு, வீந்து - (இறுதியில் அவ்விதழ்கள்) கீழ் நோக்கி மடிவுற்று, வெண்குடையாம் - வெண்மையான குடையினைப் போன்று காணப்பட்டுக் கார்ப்பருவம் இது என்பதை வலியுறுத்தாநிற்கும், (அங்ஙனமிருக்க,) தகவே கொல் - (இவ்வேளையினைக் கார்ப்பருவம் அன்றென்று கூறுவது) தக்க செயலாமோ? (என்று தோழியினைத் தலைவி வினவினள்.)

(ப-ரை.) மழைத்துளிகள் உகவுங் கார்ப்பருவம் அன்றென்று சொல்லாநின்றார் இவ்வூரார்; அச் சொலவு தான் அவர்க்குக் குணமோ குற்றமோ என்பதறியேன்; அதுதான் அவர்க்குக் குணமே கொல்லோ! வளவிய துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய் வெண்குடையாகாநின்றது தண்கோட லழிந்து.

(விரி.) இங்குத் தோழி கூறிய பருவமன்றென்ற கூற்றினைத் தலைவி பொதுவாக ஊரார் பேரிலேற்றிக் குறிப்பாக உரைத்தனள்.

(119)

பீடிலா ரென்பார்கள் காணார்கொல் வெங்கதிராற்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் - காடெலா
மத்தங் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
றுத்த மறையுந் தொடர்ந்து.

[இதுவுமது]

(பத.) (தோழியே!) கதிரோன் - பகலோன், வெம் கதிரால் - வெப்ப மிக்க கதிரோடு கூடி, அத்தம் - அத்த மன மலையாகிய மேற்கு மலைத் தொடரில், மறைவதன் முன் - ஒளிப்பதற்கு முன்னே, கொழும் கடுக்கை - வளப்பம் பொருந்திய கொன்றை மரங்களின், கோடு எல்லாம் - கிளைகளின் கொம்புகளிலெல்லாம், பொன்