98

மடலாய், குழலாகி, கூர்ந்து சுரிகோலாய் வீயும் (அதனை) பிறரொடும் நீயும் நீடாதே காண்," என முடிக்க, ஏ - அசைநிலை, வீழ்துளி - மழை. வன்புறை - வன்பு + உறை; கடினமாகக் கூறுஞ் சொற்கள். எதிர் அழிந்து சொல்லல் - எதிராகக் கலங்கிக் கூறல்.

(98)

பொன்வாளாற் காடில் கருவரை போர்த்தாலு
மென்வாளா வென்றி யிலங்கெயிற்றாய்! - என்வாள் போல்
வாளிழந்த கண்டோள் வனப்பிழந்த மெல்விரலு
நாளிழந்த வெண்மிக்கு நைந்து.

[இதுவுமது]

(பத.) இலங்கு எயிற்றாய் - விளங்குகின்ற பற்களையுடைய தோழியே! பொன் வாள் ஆல் - பொன்போன்ற வெயிலொளியினாலே (வெந்து), காடு இல் - மரஞ் செடி கொடிகளாகிய. சிறைக்காடுகளைக் கொண்டிராது வெறுந் தரைகளோடு காணப்படும், கருவரை - பெரியமலைகள், போர்த்தாலும் - (இப்பொழுது பெய்யும் மழை மிகுதியால்) மரஞ் செடிகொடிகள் மிக்கு மலர்களான் மூடப்பட்டிருந்தும், என் வாளா என்றி - இதனால் என்ன பயன்? இது கார்ப் பருவம் அன்று என்று சொல்லி நிற்கின்றாய், என்வாள்போல் - என் மேனியின்கணுள்ள ஒளி கெட்டவாறு போலவே, கண் - என் கண்களும், வாள் இழந்த - ஒளியிழந்தன, இழந்த நாள் - (தலைவனைப் பிரிந்தமையால்) நலமிழந்த நாள்களின், எண் - எண்ணிக்கை, மிக்கு - மிகுதலான, மெல்விரலும் - என் மெல்லிய விரல்களும் (அந்நாட்களை யெண்ணி,) நைந்து - தேய, தோள் - என் தோள்களும், வனப்பு - அழகினை, இழந்த - இழந்தன. (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) பொன்போன்ற வெயிலொளியால் வெந்து காடின்றியிருந்த கருவரைகள் கார்ப்பருவஞ் செய்து மலரிதழ்களான் மூடப்பட்டாலும், அதனாற் பயனென்? பருவ மன்று என்று சொல்லி வாளாநின்றி; இலங்கெயிற்றை யுடையாய்! என்மேனியின் கண்ணுள்ள ஒளிபோல ஒளியிழந்தன என் கண்களும்: போயிழந்த நாள்களின் எண் மிகுதலான் எணணி என்விரல்களுந் தேய என்தோள்களும் வனப்பிழந்தன.