பக்கம் எண் :


106காஞ்சிப் புராணம்


     அறமே பாவங்கள் அனைத்தினையும் போக்கும்; கடவுள் உலகிற்
சேர்க்கும்; சிவபிரானுக் கோர் வடிவமும் ஆகும் சிவனை வணங்குவோர்க்கு
வரும் பெரும் பயன் யாவுமே அறம் ஏன்று அளிக்கும்; யாவர்க்கும்,
எவ்விடத்தும் அச்சத்தைத் தவிர்ப்பதும் அவ்வறமே எனச் சாதாதப முனிவன்
பேசினன்.

கொடை

கொடையே எவர்க்கும் எப்பேறுங் கொடுக்கும் நெறியிற் பிறழாத
கொடையே யாருந் தன்வழியின் ஒழுகச் செய்யும் குறைதீர்ந்த
கொடையே பகையை உறவாக்கும் குலவும் பூதம் அனைத்தினையுங்
கொடையே புரக்கும் என்றுள்ளங் கொள்ளப் புகன்றான் கவுதமனே.
                                                   15

     கொடுத்தலானே யாவர்க்கும் எப்பயனும் கிடைக்கும்; அறவழியிற்
றப்பாத கொடைக்குணமே யாவரையுந் தன் வழிப்படுத்து நடத்தும் (தன் ஏவல்
கேட்பிக்கும்). குற்றந் தவிர்ந்த கொடையே பகைவரையும் உறவினராக்கும்;
விளங்குகின்ற ஆன்மாக்கள் அனைத்தினையும் அதுவே காக்கும் என்றுள்ளங்
கொள்ளும்படியாகக் கவுதமன் கூறினன்.

வாய்மை

மெய்யே சிறந்த பெருநலமாம் மெய்யே எவையும் நிலைபெறுத்தும்
மெய்யால் அழல்கால் கதிர்பிறவும் தத்தந் தொழிலின் விலகாவாம்
மெய்யே எவைக்கும் இருப்பிடமாம் மெய்யே மெய்யே சிவமாகும்
மெய்யே பிரம பதமுமெனப் புகன்றான் வினைதீர் காசிபனே.    16

     உண்மையே சிறந்த பெரு நன்மைக்கு ஏதுவாம்; எவற்றையும்
நிலைநிறுத்தும்; நெருப்பு, காற்று, சூரியன் முதலிய பிறவும் தத்தம் தொழிலை
நியதியாகச் செய்யவும் அதுவே ஏதுவாம்; சத்தியமே எவற்றினுக்கும்
ஆதாரமாம்; அதுவே சத்தியமாகச் சிவமாகும்; மெய்யே பெரும் பதமும்
எனப்பேசினார் காசிப முனிவர்.

வேள்வி

எச்சம் ஒன்றே இருமையினும் மேலாம் இமையோர்க் குவப்பாவ
தெச்சம் ஒன்றே மகத்திறையாம் எம்மான் விழையப் படுவதுவும்
எச்சம் ஒன்றே நனிசாலச் சிறந்த பொருளும் இருங்கரும
எச்ச நிகர்வே றில்லையெனப் பரத்து வாசன் இயம்பினனால்.    17

     வேள்வி ஒன்றே இம்மையினும், மறுமையினும் நலம் பயக்கும்
அவ்வேள்வியே கண்ணிமையாராகிய தேவரை மகிழ்ச்சியுறச் செய்வதும்;
வேள்விக்குத் தலைவனாகிய எமது சிவபெருமானால் விரும்பப்படுவதும்
அதுவே. மிக மிகச் சிறப்புடைய கருமமாகிய வேள்விக்கொப்பது வேள்வியே.
அதற்கொப்பது வேறில்லை எனப் பரத்துவாச முனிவர் கூறினர்.

     ஏகாரங்கள், பிரிநிலையொடு தேற்றமாம். சற்கருமங்களின் வேள்விமிகல்;
‘‘எச்சத்தின் வேறாம்ஏனைக் கருமங்கட் கெச்சம் போல” (தக்கேசப்