அழகும் பொலிவும் அமைந்த இப்பிரம நகர்க் கொரு புடையிலே விளங்கும் ஒளியையுடைய ஆண்சிங்கம் ஒன்று மிகப்பல சிங்கங்கள் மருங்குசூழ நிகரின்றி யிருக்கும் தன்மைபோல வெண்டிருநீற் றொளியால் சிவஞானக் கோலத்தையுடைய யோகியர்கள் சூழ்ந்து துதிக்கத் திருவருளையுடைய சனற்குமார முனிவர் எலும்பை அணிகலனாகக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை உள்ளத்துட் கொண்டு சிவயோகம் செய்து வருநாட்களில் ஓர் நாள். வைகறை எழுந்து கங்கைநீ ராடி வானவர் முனிவர்தென் புலத்தார், செய்கடன் உவப்பத் தெண்புனல் இறைத்து நியாசமுந் தியானமும் ஆற்றிப், பொய்களை விரசை அங்கியின் விதியாற் பூத்தநீ றங்கையின் எடுத்து, நைகரந் தீர்ந்த அன்பொடு நியாச நடைபெறு தியானமுன் னாக. 13 விடியற் காலையில் எழுந்து கங்கை நீரில் மூழ்கித் தேவர்களும், முனிவர்களும், பிதிரர்களும் செயத்தக்க கடப்பாட்டினை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி உறத் தெள்ளிய நீரை அருக்கியந்தந்து அங்க நியாசம், கர நியாசங்களையும், தியானத்தையும், செய்து உண்மை வாய்ந்த விரசா ஓமவிதியினால் மலர்ந்த திருநீற்றினை அகங்கையில் மகிழ்ச்சி கூடிய அன்புடன் அவ்விருவகை நியாச முறையின் வழியுள்ள தியான முதலாக. அடைவுறு பஞ்சப் பிரம்மந் திரத்தால் அங்கியென் றற்றொடக்கத்தான், முடிவில்சா பால மனுக்கள்ஏ ழாற்றான் மூவிரண்டதர்வமந் திரத்தால், வடிவுறும் இடக்கை வைத்துமுன் முக்கால் மந்திரித் தறலினால் குழைத்துக், கடிகெழு சென்னி முதல்அடி காறும் பிரமம்ஓர் ஐந்தையுங் கழறி. 14 முறையாயுள்ள பஞ்சப் பிரம மந்திரத்தாலும் அங்கி என்பதை முதலிலுள்ள திருமந்திரத்தாலும், அழிவில்லாத சாபால முனிவர் தொகுத்த மந்திரங்கள் ஏழாலும் அதர்வவேத மந்திரங்கள் அறுவகையாலும் முன்பு அழகிய இடக்கரத்தில் வைத்து மூன்றுமுறை அம்மந்திரங்களை ஓதி நீராற்குழைத்து விளக்கம் அமைந்த தலைமுதல் முழங்கால்காறும் அந்தப் பஞ்சப் பிரம மந்திரங்களையும் திருத்தமாகக் கூறி. நிறைஉத் தூளஞ் செய்துபின் திரியம் பகங்களால் நிகழ்த்தும்அஞ் செழுத்தால், அறலின்ஆ சமித்துப் பின்னருந் திரியா யுடந்திரி யம்பக மனுவான், முறையின் அஞ் செழுத்தால் புண்டர மூன்றும் முச்சுடர் முக்குணம் மும்மை, மறைகள்மூ வுலகு முந்நிறம் முத்தீ வடிவெனச் சிந்தையிற் கண்டு. 15 குறையற நிறைவுபுட நீர்விடாது பொடியாகப் பூசிப், பின்னர்த் திரியம்பக மந்திரத்தாலும், செயற்படும் அஞ்செழுத்தாலும் நீர்கொண்டாசமனஞ் செய்து, மேலும் திரியாயுஷ மந்திரத்தாலும், திரியம்பக் |