மகனால் இழந்த உயிரை மீளப்பெற்ற மாட்சிமை யுடைய இரேணுகை நலமிக்க கணவனை இழந்த துன்பத்துடன் தன் மகன் எண்ணுதற்கரிய சிறப்பினை வரமாகப் பெற்றதனை மனங்கொண்டு அவன் கருத்தின் வழியே குறித்த இடத்தை அடைந்தனள். இளங்களி வண்டினம் இமிரும் பூம்பொழில் வளங்கமழ் காஞ்சியை மருவி மைந்தனார் உளங்கொள வழிபடு நகரின் ஊங்குற விளங்கொளிச் சிவக்குறி விதியின் தாபித்தாள். 20 | வண்டுகள் குழாமாக ஒலித்துச்சூழ்கின்ற வளமுடைய சோலைகள் பரவியுள்ள காஞ்சிபுரத்தினை அடுத்துத் தன்மகனார் மனம்பொருந்தி வழிபாடு செய்த பரசிராமேசத்தின் அயலே விளங்குகின்ற ஒளியினையுடைய சிவலிங்க மூர்த்தியை நூன்முறைப்படி நிறுவினாள். மகவிடத் திருத்துபே ரன்பின் மாட்சிமை தகவுறப் பூசனை தவாது பல்பகல் அகமுறப் புரிவுழி அருளி ஆங்கெதிர் நகமடப் பிடியொடும் நம்பன் தோன்றினான். 21 | தாய் தன் மகவினிடத்து வைக்கும் பேரன்பினது மாண்புடைமையை ஒப்பப் பேரன்பு வைத்துப் பூசனையை ஒழியாது பன்னாள் மனம் பொருந்தப் புரிந்து வருநாள் கருணை கூர்ந்து நம்பி அடையத்தக்க பெருமானார் மலையரையன் மகளாராகிய இளைய பெண் யானையை ஒப்பாருடன் ஆங்கெதிரே திருக்காட்சி தந்தார். நுண்ணிடை இரேணுகை மடந்தை நோக்கினாள் உண்ணிகழ் காதலின் உருகிக் கைதொழூஉ வண்ணமென் குயிலினஞ் சமழ்ப்ப வாய்திறந் தண்ணலைப் பழிச்சிநின் றறைதல் மேயினாள். 22 | நுண்ணிய இடையினையுடைய இரேணுகை நோக்கி எழுகின்ற விருப்பினால் உள்ளம் உருகிக் கையாற் றொழுது அழகிய மெல்லிய குரலினையுடைய குயிலினங்கள் நாணும்படி வாயைத்திறந்து இனிய இசைப்பாக்களால் பெருமானாரைத் துதி செய்து நின்று கூறத் தொடங்கினாள். ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ தாதைதாய் இமவரைத் தைய லாகுமால் கோதறும் இருமுது குரவர் மாட்டெவர் மேதகு மானம்விட் டியம்பி டாதவர். 23 | ‘‘ஏனையோரிடத்து கூறத்தகாதனவும் குற்றமறுக்கும் இருமுது குரவராகிய தாய் தந்தையரிடத்தே மேன்மை பொருந்திய நாணத்தைக் |