காக்கைக்கு இராவணனும், சுளைக்குச் சீதையும், கலத்திற்கு இலங்கையும், மந்திக்கு அனுமனும், மலைக்கு மயேந்திரமும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன. தாசரதி-தசரதன் புதல்வனாகிய இராமன்; தத்தி தாந்தம். அலை இரண்டும் கடல். இடைச்சியர்பால் நடைகற்பச் செல்வதென வயல்மேவும் எகின மெல்லாம், படைத்தவளம் பாடியிற்போய் ஆன்பாலைவாய்மடுத்துப் பையுள் நீங்கும், மடைத்தலைசூழ் வயல்மகளிர் மொழிபயிலப் போவதென வனத்துள் வாழும், பெடைக்குயில்போய்ப்பணைக் கமுகின் கனிதொண்டைக் கனியென்னப் பேணும் ஓர்பால். 135 மருத நிலத்து வாழும் அன்னங்கள், வளம் நிரம்பிய முல்லை நிலத்தூர்களின் ஆய்ச்சியர்பால் நடைகற்றுக் கொளற்குச் சென்றாலெனச் சென்று, பசுவின் பாலை நிரம்ப உண்டு பசித்துன்பம் நீங்கும். மடை உடுத்த வயல்சூழ் உழத்தியர்பால் மொழி கற்கப் போவதென முல்லை நிலத்துப் பெண் குயில் போய் வயலிடத்துள்ள பாக்குமரத்தின் பழுக்காயைக் கொவ்வைப் பழம் என எண்ணி விரும்பும் இடமும் ஆங்குளது. கொடும்பரவர் கழியுழக்கக் குதித்தெழுமீன் ஆய்ச்சியர்பாற் குடத்துள் வீழ்ந்தங், கடும்பயத்தோ டலமருமற் றவர்கடையுந் தயிரோதைக் கலமந் தோடி, ஒடுங்குமுயல் கைதையினுள் அடங்கியங்கட் கடலொலிகேட் டுள்ளம் மாழ்குங், கடுங்கருமத் தொடர் அந்தோ யாங்குறினும் விடாதென்னக் காட்டும் ஓர்பால். 136 கொடியர் ஆகிய நெய்தல் நிலத்தோர் கழியை வலைகொண்டு கலக்கத் துள்ளி யெழுந்த மீன், இடைச்சியர் பாற்பானையுள் வீழ்ந்து காய்ச்சும் அப்பாலில் மனம் சுழன்று வருந்தும். அப்பெண்டிர் தயிர் கடைதலின் எழும் ஓசைக்கு வருந்தி ஓடி ஒடுங்கு முயல் தாழைப் புதருள் அடங்கி, அங்குக் கடலோசையைத் தொடர்ந்து கேட்டு உள்ளம் வருந்தும், இவற்றால் கொடிய வினையாகிய வலை எவ்விடத்துறினும் அனுபவி்த்தால் அல்லது கழியாது எனக் காட்டும் ஓர் புறத்து நிகழ்ச்சி. இது முல்லை நெய்தல்களின் மயக்கம். பயத்தோடு-பயத்தால், இருபொருள் கொள்க. ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி’ (தொல்). ‘தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாய் வீழ்ந்த தொக்கும், இவை. இடுகும் இடைக் கடைசியர்கள் களைந்தெறிந்த நறுங்கமலம் இரைக்கும் முந்நீர்ப், படுதிரைமேல் வயங்குதலுங் கடல்முளரி பூத்ததெவன் பாரீர் என்பார், உடைதிரைநீர்க் கடல்கிளைத்த துகிர்க் கொடிபோய்ப் பழனமிசை ஒளிரக் கண்டோர், கடிவயலுந் துகிர்ஈன்ற தென்னென்பார் இப்பரிசு கவினும் ஓர்பால். 137 நுணுகும் இடையினையுடைய உழத்தியர் களை எடுத்த நறிய தாமரை மலர், ஒலிக்கின்ற நீர்த்திரைமேல் விளங்குதலும், கடல் தாமரை மலரைப் பூத்தது என்னே பாரீர் என்று வியப்பார். கரையொடு மோதி உடைகின்ற திரைசூழ் நீர்க்கடலில் தழைத்த பவளக்கொடிபோய் வயலில் |