|
மகன் மடிந்ததற்குச் சிறிதும் வருந்துதலின்றிச் சோழிக வேனாதியை நோக்கி,
''உதயகுமரனுக்கு யான் செய்யவேண்டிய தண்டனையைத் தான் செய்தமையால் விஞ்சையன்
தகவில னாவன்.
''மாதவர் நோன்பும்
மடவார் கற்பும்
காவலன் காவ லின்றெனின்
இன்றால் ;''
''தன்மகனைப்புவியிலே கிடத்தி அவன்மீது
தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர்பிரான் வழியில் ஒரு தீவினையாளன்
பிறந்தான் என்னுஞ் சொல் ஏனை யரசர்களின் செவியில் உறுவதற்கு முன்னம்
அவனைப் புறங்கா டடைவித்துக் கணிகைமகளாகிய மணிமேகலையையும் சிறைப்படுத்துக''
என்றனன் ; சோழிக வேனாதி அவ்வாறு செய்தான். (இதன்கண் மருதி வரலாறும்
விசாகையின் வரலாறும் மகளிர்க்குச் சிறந்த ஒழுக்கங்களை அறிவுறுத்துவன ;
பின்னது கற்பதற்கு மிக்க சுவை பயப்பதுமாகும் மருதியென்பாளுக்குச் சதுக்கப்
பூதம் கூறும் வாயிலாக, ''தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப்
பெய்யும் பெருமழை யென்றவப், பொய்யில் புலவன் பொருளூரை தேறாய்'' எனத்
திருவள்ளுவரும், திருக்குறளும் பாராட்டப்படுதல் அறிந்து மகிழற்குரியது.)]
|