பக்கம் எண் :

பக்கம் எண் :443

Manimegalai-Book Content
27. சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
 

பிரியும் - வேறுவேறாகப் பிரிந்து, பறைஓசையிற் கெடும் - பறை யிடத் தெழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் முதலொடு ஒன்றிவிடும் எ - று.

தாதகிப்பூ-ஆதித்திப்பூ. கட்டி-கரும்பின் சாறடுகட்டி. நீலகேசியுரை காரர், "மா முதலாகிய வைந்து திரவியத்தின் கூட்டத்தின் மத்திய சக்தி பிறந்தாற்போல" (858 உரை) என்று கூறுகின்றார். மா முதலாகிய ஐந்தனுள், மாவொடு தாதகியும் கட்டியும் பெறப்படுவதால் ஏனை யிரண்டையும் "மற்றும் கூட்ட" என்பதனால் கொண்டார் என்று கொள்க. அவை இரண்டும் இன்னவெனத் தெரிந்தில. தாதகி முதலிய ஐந்தின் கூட்டத்தால் மதுவிடத்தே களிப்புத் தோன்று மென்றது, ஐம்பூதக் கூட்டுறவால் உணர்வு பிறக்குமென்றற்குவமை. அவ்வப் பூதக் கூறுகள் தத்தம் முதலொடு பிரிந்து சென்று கூடிவிடுதலின், "வெவ்வேறு பிரியு" மென்றும், பூதங்களிற் கூடுந் திறத்தைப் "பறையோசையிற் கெடும்" என்றும் கூறினான். பூதவாதிகட்கு நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐம்பூதமும் உடன்பாடு; இதனை, "திண்ணென் றீநில நீர் வளி காயத்தாற், கண்ணு மூக்கெடு நாமெய் செவிகளாய், வண்ண நாற்றஞ் சுவையுனொ டூறொலி, எண்ணுங்காலை யியைந்துழி யெய்துமே" (நீல. 857) என்று பிறரும் எடுத்தோதிக் காட்டுவர். இனி, உலகாயதர் விசும்பொழிந்த பூதநான்கையுமே கொண்டு அவற்றின் கூட்டுறவால் உடலுணர்வுண்டா மென்றம், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் கலந்தவழிச் செந்நிறம் பிறத்தல்போலப் பூதக்கலப்பால் உணர்வு பிறக்கு மென்றும் கூறப மதுவி னிடத்தே களிப்புப்பிறக்குமாற்றினை இவர் கூறியதுபோலச் சாருவாகரும் கூறுகின்றனர். இதனை மாதவர் எழுதிய சருவ தரிசன சங்கிரகத்துச் சாருவாக தரிசனத்துட் காண்க.

259--77.  உயிரொடுங் கூட்டிய உணர்வுடைப் பூதமும் - உயிர்த் தோற்றத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட வுணர்வுடைய பூதக்கூறும்; உயிரில்லாத உணர்வில் பூதமும்-உடம்பினாக்கத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத பூதங்கூறு மாகிய, அவை-அப்பூதக் கூறுகள்; அவ்வப்பூதவழி பிறக்கும்-அவ் வப்பூதங்களின் வழியாகவே தோன்றும்; மெய்வகை இதுவே; உண்மைநெறி இதுவே யாகும்; உரை விகற்பமுன் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே-இவற்றின் வேறாகக் கூறப் படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவேயாம்; கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்-காட்சி யளவையல்லது வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் கொண்டிலம்; இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே-இவ்வாழ்வும் இவ்வாழ்விற் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிவனவாம்; மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே என்றலும்- மறுபிறப்புண்டென்றும் ஈண்டுச் செய்யப்படும் வினைப