மென்றும், பொதுவினை அபரசாமானிய
மென்றும் கூறுப. மரங்கட்குள்ள மரமாந்தன்னையும் குடங்கட்குள்ள குடமாந் தன்னையும்
அபரசாமானியம்; மரங்கட்கும் குடங்கட்குமுள்ளஉள்ளதாந் தன்மை பரசாமானியம்
என வேறுபடுத்தறியப்படும். சத்தபதார்த்தி யென்னும் நூல் மூன்றாகப்
பகுத்துப் பரம் அபரம் பராபரம் என்று கூறுகிறது. இது பிற்கால வழக்கு. பரசாமானியத்தில்
பொருள்களையும் அபராசாமானி யத்தில் குணஞ் செயல்களையும் அடக்கிக் கூறுவது முண்டு.
குணத்துக்குக் குணமில்லாமை போலப் பொதுமைக்குப் பொதுமையில்லை.
261-- ஒன்று அணு - விசேடமாவது ஒன்றாகி அணுவாகும் எ -
று
எனவே, பல பொருட்கும் பொதுவாகிய
தன்னையன்றி ஒன்றிற்கே யுள்ள சிறப்புத் தன்னை விசேடமாம் என்பதாம். அணு
வொவ்வொன்றும் விசேடமாம் என்றற்கு, "ஒன்றணு" என்றார். "சிறப்புடைப் பொருளைத்
தானினிது கிளத்தில்" என்பதனால் அணுவைக் கூறினாரேனும், காலமும் இடமும் ஆகாசமும்
ஆன்மாவும் மனமும் விசேடப் பொருளாகவே கொள்ளப்படும். அணுக்கள் அளப்பிலவாதலின்,
விசேடப் பொருள்களும் அளப்பில என்று சந்தபதார்த்தி யுடையார் கூறுகின்றார்.
261--3. கூட்டம்-சமவாயமாவது; குணமும் குணியுமென்று ஒன்றிய-குணமும்
குணியுமாய் ஒன்றிய ஒற்றுமையாமென்று, வாதியும் உரைத்தனம் - வைசேடிக வாதியும்கூறி
முடித்தானாக; உடனே பூதவாதியை நீ புகல் என்ன - உடனே ஆங்குப் போந்த பூதவாதியைக்
கண்டு நின்வாதத்தை நீ சொல்லுக வென்று மணிமேகலை கேட்க எ - று.
என்றது, குணத்துக்கும் குணிக்குமுள்ள
இயைபே சமவாயமென்பது என்றதாம். கணாதர் காரணத்துக்குங் காரியத்துக்குமுள்ள
தற்கிழ மைத் தொடர்பு சமவாயம் என்பர்; அவருக்குப் பிற்போந்த வைசேடி கர்
பழத்திற் சுவையும் மணியிலொளியும்போல இடமும் இடத்து நிகழ் பொருளுமாகிய தற்கிழமையியைபு
சமவாயம் என்றும் வேறுபிறர் அவர்களை மறுத்தும் கூறுவர்.
பூதவாதி
264--68. தாதகிப் பூவும் கட்டியும் இட்டு-ஆத்திப் பூவையும்
கருப்புக் கட்டியையும் பெய்து, மற்றும் கூட்ட-வேறுபிற பொருள்களையும் கலந்தவழி.
மதுக்களி பிறந்தாங்கு-கள்ளினிடத்தே களிப்புண் டானாற்போல, உற்றிடும் பூதத்து
உணர்வு தோன்றிடும்-பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும்,
அவ்வுணர்வு- அவ்வாறு தோன்றிய உணர்வுதானும், அவ்வப் பூதத்தழிவுகளின்- அவ்வப்பூதங்களின்
கூட்டம் கலைந்து நீங்குமிடத்து, வெவ்வேறு |