|
பள்ளையன் =
குள்ளன்.
பள்ளை - பள்ளையம் = உண்கலம்.
பள்ளையம் போடுதல் = தெய்வத்திற்குப்
படைத்தல்.
பள்கு - பளகு = குற்றம் (தாழ்வு).
பள் - பண் = நீர்நிலை.
| |
பண்
- பண்ணை = குழி, நெற்குத்துமாறு நிலத்திற் பதித்த நடுப்பள்ளக் கல், நீர்நிலை,
மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்தி, மரக்கலம், விலங்கு
துயிலிடம்.
|
பண் - பணி, பணிதல் = கீழ்ப்படிதல்,
பணி = தொண்டு, வேலை, தொழில்.
பணி - பாணி, பாணித்தல் = காலந்தாழ்த்தல்.
பண் - படு = 1. (பெ.) குளம், மடு.
2. (பெ.எ.) இழிவான.
படு - படுகர் = பள்ளம்,
வயல், மருதநிலம், நீர்நிலை,
படு - பாடு - பாடி = தாழ்வான வீடுகள்
சேர்ந்த முல்லை நிலத்தூர் அல்லது இடைச்சேரி.
பாடு - பாடை = கால்கழி கட்டில்.
படு - படை - படைத்தல் = உண்ணுமாறு
கீழிடுதல்.
படுத்தல் = தாழக்கிடந்து தூங்குதல்,
படு - படை = படுக்கை, தூக்கம்.
படுதல் = விழுதல், சாதல். படுத்தல்
= கொல்லுதல்.
படு - படை = கொல்லும் ஆயுதம் அல்லது
சேனை.
| |
படு
- படி, படிதல் = அடியில் தங்குதல், தங்குதல், கீழ்ப்படிதல், விழுந்து வணங்குதல், அமுங்குதல்,
தணிதல், குளித்தல், தூங்குதல்.
|
இதுகாறுங்
கூறியவற்றால், தமிழில் சொற்பொருள் வரிசை ஏரண முறைப்படிதான் இயலும் என்பதையும்,
பள்ளி என்பது பள்ளம் அல்லது தாழ்வு என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தூய தென்சொல்
என்பதையும், தெற்றெனத் தெரிந்து கொள்க.
வட மொழியில் (சமற்கிருதத்தில்), ளகர மின்மையால்,
பள்ளி என்னுஞ் சொல் பல்லி என்றும் பல்லீ என்றும் வழங்கும். இவற்றுள் முன்னதற்குச் சிற்றூர்,
காடுவாழ் மரபினர் குடியிருப்பு, குடிசை, வீடு என்னும் பொருள்களும்; பின்னதற்குச்
சிற்றூர், குடிசை, வீடு, நகரம், ஒரு கூல முகத்தலளவு, சிறு வீட்டுப்பல்லி என்னும்
பொருள்களும்; மானியர் உவில்லியம் சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில் தரப்பட்டுள்ளன.
இவ் இரு சொல் வடிவுகட்கும் வேராகக் காட்டப்பட்டுள்ள சொல் pall
(பல்ல்) என்பது, இவ் வேர்ப்பொருளாகக் குறிக்கப்பட்டவை ''போதல்'' (to
go)
, ''இயங்குதல்'' (to move)
என்பன. இவ்
|