|
1. பள்ளம் அல்லது தாழ்வு :
| |
தாழ்வான
வீடுகள் அமைந்த சிற்றூர் அல்லது முல்லை நிலத்தூர், முல்லை
நிலத்தூர் போன்ற இடைச்சேரி, ஆழிடம்.
|
2.
பள்ளமான வயலில் வேலை செய்யுங் குலத்தார் :
பள்ளத்தி,
வன்னியன், வன்னியகுலச் சிற்றரசரான குறும்பர்.
3. படுக்கை :
மக்கட் படுக்கை,
விலங்கு துயிலிடம், தூக்கம்.
4. மனை (வீடு) :
| |
வீடு,
அறை, அரண்மனை, வேலைக்களம், அறச்சாலை, முனிவர் தவநிலையம், சாலை.
|
5.
கோயில் :
| |
கோயில்
(பொது), சைன பவுத்தக் கோயில், கிறித்தவக் கோயில், முகமதியர் கோயில்
(பள்ளிவாசல்), கல்லறை. கோயில் என்பது அரசன் மனை போன்ற தேவமனை
என்றுமாம்.
|
6. கல்விச் சாலை
7. ஊர் :
| |
நகரம்.
பள்ளி என்பது ஒரு கோயில் அல்லது அரண்மனையிருப்பதுபற்றியும் ஒரு நகரைக் குறிக்கும்.
|
8.
இடம் :
இச்சொற்பொருள்
வரிசை ஏரணமுறை தழுவியதாகும். இதில் இறுதியில் வந்துள்ளபொருள், சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் முதலிடம் பெற்றிருத்தல் காண்க, இங்ஙனம் தலை கீழாக
மாறியது, மொழி வளர்ச்சிக் காலத்து இலக்கியம் முற்றும், மறைந்தபின் இடைக்காலத்து
இலக்கியத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, வரலாற்றுமுறை தழுவமுயன்றதன் பயனே.
இனி, இப்பள்ளி யென்னுஞ் சொற்பொருள்
வரிசையை வழுப்பட அமைத்ததோடமையாது, இச்சொல்லை வடசொல்லென்றுங் கூறத்
துணிந்துளது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சியம். இச்சொல் தென்சொல் என்பதை, பள்ளம்
அல்லது தாழ்வு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இதனொடு தொடர்புற்ற
ஏனைச் சொற்களைக் கண்டு தெளிக. அவையாவன:
பள் - பள்ளம் - பள்ளன் = பள்ளமான
வயலில் வேலை செய்பவன்.
பள் - பள்கு - பள்குதல் = பதுங்குதல்,
பள் - பள்ளை = குள்ளமான ஆட்டுவகை
|