|
திரவிட மொழிகளின் உறவியல் வரிசை
திரவிட மொழிகள்:
| |
1) தமிழ் |
3. தெலுங்கு |
5. துளு (துளுவம்) |
7
| |
2) மலையாளம் |
4 கன்னடம் |
6. குடகு (குடகம்) |
எனத் திருந்தியவை ஆறும்,
| |
1. தோடா(தொதுவம்) |
3. கோண்டு(கோண்டி) |
5. ஒராஒன் |
| |
2. கோட்டா
|
4.
கூ
|
6.அரசமகால் (ராஜ்மஹால்) |
எனத் திருந்தாதவை ஆறும்,
ஆக மொத்தம் பன்னிரண்டு எனக் கூறினர்
கால்டுவெல் ஐயர். இவற்றுடன் பிராகுவீ, பர்சி (பர்ஜி)
என்னும் இரு திருந்தா மொழிகளும் சேர்க்கப்பெறும்.
திருந்திய திரவிட
மொழிகள் ஆறும், தூய்மை பற்றிய இறங்கு வரிசையிற் பின் வருமாறு அமையும்:
| |
1) தமிழ் |
3) கன்னடம் |
5) குடகம் |
| |
2) மலையாளம் |
4. துளுவம் |
6) தெலுங்கு |
திரவிடம் எனப்பெறும் எல்லா
மொழிகளும் இன்று ஒரே பெயரால் வழங்கினும், தமிழொழிந்தவை யெல்லாம் சிறிதும் பெரிதும்
ஆரியத்தன்மை யடைந்துவிட்டமையால், அவற்றைத் தமிழும் திரவிடமும் எனப்
பிரித்துக் கோடலே தக்கதாம். அவ்விருபாற்கும்
தமிழியம்
(Tamulic)
என்பதைப் பொதுப் பெயராகக்
கொள்ளலாம்.
தமிழினின்று
திரிந்த திரவிட மொழிகளுள் மலையாளமும் ஒன்றாகக் கொள்ளப்பெறினும், அது
நெருக்கத்திலும் தூய்மையிலும் பிற திரவிட மொழிகளிலும் வேறுபட்டு. தமிழுக்கும் திரவிட மொழிகட்கும்
இடைப்பட்ட நிலையிலுள்ளதாகக் கொள்ளல் வேண்டும். தொன்று தொட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை
சேரநாட்டுச் செந்தமிழாகவும், அதன்பின் 16ஆம் நூற்றாண்டு வரை கேரளநாட்டுக் கொடுந்தமிழாகவும்,
இருந்துவந்த மொழியைப் பிற திரவிடமொழிகளோடொப்பக் கொள்வது எவ்வகையினும் பொருந்துவதன்று.
பொதுவாக, திரவிடம் தெற்கே செல்லச்
செல்லத் திருந்தி விரியும் என்றும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்து
சுருங்குமென்றும் அறிதல் வேண்டும்
.
திரவிடமெல்லாம் ஒரு மொழி
திரவிட மொழிகள் இன்று பதினான்கெனக்
கணக்கிடப்பட்டிருப்பினும், அவையனைத்தும் ஒரு காலத்தில் ஒரே மொழியாய் வழங்கியமை பின்வரும்
சான்றுகளால் உணரப் பெறும்:
|