|
இதுகாறுங் கூறியவற்றால், பசு என்பது வடசொல்லேயென்றும்,
அதைத் தென்சொல்லென்பதால் பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகிப் பல தூய தென் சொல்லும்
வடசொல்லாகத் தோன்று மென்றும், ஆதலால் அதனால் தீமையே யன்றி நன்மையில்லை யென்றும், பசும்புல்லைத்
தின்பது பசுவென்பது சற்றும் பொருந்தாதென்றும், அறிந்து கொள்க.
இனி, பாசம் என்னும் வடசொல், பசுமை, பசை, பாசி என்னும்
தென் சொற்களுள் ஒன்றன் திரிபெனக் கொள்ள இடமிருப்பினும், இந்தியத் தோலாற் செய்யப்படும்
பாதக்கூடு (boot)
இந்தியக் காலணியா காமை போன்றே, தென்
சொல்லினின்று திரிந்து ஒரு சிறப்புப் பொருளை யுணர்த்தும் வடமொழித் திரிசொல்லும் தென்
சொல்லாகாமை கண்டுகொள்க.
| |
-தமிழ்ப்பாவை
4ஆம் ஆண்டுச் சிறப்புமலர்
|
|
(மதுரை
எழுத்தாளர் மன்றம்)
|
|